வைகோ வழக்கை விசாரிக்கும் டி.எஸ்.பி. திடீர் டிரான்ஸ்பர்
மதுரை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோ தொடர்பான வழக்குகளைவிசாரித்து வரும் க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பியான மகேந்திரன் திடீரென்று டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைகோவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து சரியான தகவல்கள் திரட்டாததால்தான் கோபமடைந்த தமிழக அரசு அவரைத் தூக்கி அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வைகோ கைது செய்யப்பட்டு 110 நாட்களாகியும் இன்னும் குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை.திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சின் ஆடியோ கேசட்டைத் தவிர வேறு குறிப்பிடப்படும்படியான ஆதாரம் எதுவும் க்யூ பிராஞ்ச் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை.
ஒருவரைக் கைது செய்த 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அவர் மீதுசுமத்தப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ஜாமீனில் வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
வைகோ கைது செய்யப்பட்டும் 90 நாட்களுக்கு மேலாகி விட்டன. ஆனால் பொடா சட்டத்தில் 90 நாட்களுக்குள்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எந்த இலக்கும் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் வைகோவுக்கு ஜாமீன் கேட்டு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அவரும் அதை விரும்பவில்லை.அதனால் அவர் இன்னும் தொடர்ந்து வேலூர் சிறையிலேயே உள்ளார்.
இந்நிலையில் பொடா வழக்குகளை விசாரித்து வரும் டி.எஸ்.பியான மகேந்திரன் டெல்லியில் உள்ள தமிழகபட்டாலியன் பிரிவு டி.எஸ்.பியாக சமீபத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
புலிகளுக்கும் வைகோவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் எதையும் க்யூ பிராஞ்ச் திரட்டாதகாரணத்தாலேயே மேலிடம் கடும் கோபம் கொண்டதாகவும், அதன் விளைவு தான் இந்த டிரான்ஸ்பர் என்றும்கூறப்படுகிறது.
ஆதாரம் இல்லாததால் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்காகி விடும்சூழ்நிலையில், விசாரணை அதிகாரியையே (டி.எஸ்.பி.) குற்றவாளியாக்க நேரிடும் என்பதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த திடீர் மாறுதல் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் காரணங்களைத் தவிர, டெல்லி சென்று பொடா வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்குவசதியாகவும் மகேந்திரனை அங்கு இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு என்றும் வேறு சில வட்டாரங்கள்தெரிவித்தன.
மகேந்திரனுக்குப் பதிலாக க்யூ பிராஞ்சுக்கு புதிதாக எந்த டி.எஸ்.பியும் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications