காவிரி: சட்டத்தை நிலைநாட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்- ராமதாஸ்
சென்னை:
தமிழகத்திற்கு நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளதன் மூலம் உச்ச நீதிமன்றம்சட்டத்தை நிலைநாட்டியுள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக அரசைக் கண்டித்துள்ளதையடுத்து உச்ச நீதிமன்றம் தன்னுடைய பெருமையையும் ஸ்திரத் தன்மையையும்அதிகரித்துக் கொண்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு நிச்சயம் நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுமேலும் அதிகரித்துள்ளது.
ஆனாலும் இந்த உத்தரவைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கியுள்ளதால் அங்குள்ளதமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள தமிழர்களைக் காக்க வேண்டியது அம்மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அதுநழுவிவிடக் கூடாது.
மேலும் கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்பவும், தமிழ் படங்களைத் திரையிடவும் கிருஷ்ணாதலைமையிலான அரசு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ராமதாஸ்.
"ரஜினி ஒரு பொருட்டே இல்லை":
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் மீதான விமர்சனங்கள் குறித்துதாராளமாக என்னை சந்தித்து அவர் பேசலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ரஜினி குறித்து அடிக்கடி பேசி அவரை பெரிய ஆளாக்க நான் விரும்பவில்லை. அவரை ஒரு பொருட்டாகவேநான் நினைப்பதில்லை.
இளைஞர்களை அவரது படங்கள் கெடுக்கின்றன. அதிலிருந்து அவர்களைக் காக்கவே ரஜினியை நான் தீவிரமாகஎதிர்க்கிறேன், தொடர்ந்து எதிர்ப்பேன்.
என்னைப் பற்றி இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவிடம் ரஜினி புகார் கூறியிருப்பதாக வந்த செய்திகளை நான்நம்பவில்லை. டெல்லி வரைக்கும் விஷயத்தைக் கொண்டு போகக் கூடிய அளவுக்கு அவர் கோழையா?
ஒருவேளை என்னைப் பற்றிக் கருத்துக் கூற ரஜினி விரும்பினால், கூப்பிடு தொலைவில் இருக்கும் திண்டிவனத்தில்உள்ள என்னிடம் போனில் பேசலாம்.
எனது வீட்டுக்கும் ரஜினி வரலாம், பேசுவோம். அவர் குறித்து நான் கூறிய விமர்சனங்கள் குறித்து என்னிடம்விவாதிக்கலாம். எனது வீட்டுக் கதவுகள் எப்போதும் அவருக்காகத் திறந்தே இருக்கும்.
சத்ருகன் சின்ஹாவுக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும்? ரஜினிக்கு முன்பாகவே இளைஞர்களைக் கெடுத்தவர்அவர்.
ஹீரோ தண்ணி அடிக்கலாம், சிகரெட் பிடிக்கலாம் என்று என்ன என்ன கெட்ட பழக்கங்களை வேண்டுமானாலும்செய்யலாம் என்று "வரைமுறையை" ஏற்படுத்தியவரே சத்ருகன் சின்ஹா தான். அவரைப் போய் தனது நண்பர்என்று கூறிக் கொள்கிறார் ரஜினி.
சினிமாவில் நல்லதை விட கெட்டதே அதிகம். இதை எதிர்க்க அத்தனை பேரும் விரும்புகிறார்கள், ஆனால்யாருக்கும் தைரியம் இல்லை.
நான் துணிச்சலாக எதிர்த்ததை பாராட்டுகிறார்கள். புதிய இயக்கமே ஆரம்பிக்கக் கூறி வருகிறார்கள். அது எனக்குத்தேவையில்லை. நான் சுய லாபம் பார்க்க விரும்பவில்லை.
பெண்களைக் கேவலப்படுத்துவது போலவும், பயமுறுத்துவது போலவும் தான் பல காட்சிகள் சினிமாவில்வருகின்றன. இதை எத்தனை காலத்திற்குத் தான் பொறுத்துக் கொள்வது? இதைத் தடுத்து நிறுத்தும் காலம் வந்துவிட்டது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications