ரஷ்யா: 32 தீவிரவாதிகளை கொன்று பணய கைதிகள் மீட்பு
மாஸ்கோ:
மாஸ்கோ கலை அரங்கம் ஒன்றில் கடந்த 3 நாட்களாக சுமார் 800 பேரை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு ரஷ்ய அரசை மிரட்டிவந்த 36 செசன்ய தீவிரவாதிகளை சிறப்புப் படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
இத் தாக்குதலில் 90 பணயக் கைதிகளும் பலியாயினர்.
கடந்த புதன்கிழமை இந்த அரங்கத்திற்குள் நுழைந்த 50 செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் 800 பேரையும் பயணக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
செசன்யாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரை உடனே திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து பணயக் கைதிகளையும்கொன்றுவிடுவோம் என மிரட்டி வந்தனர்.
அவர்களுடன் ரெட்கிராஸ் உள்ளிட்ட அமைப்புகள் பேச்சு நடத்தி 8 குழந்தைகளை மீட்டனர். மேலும் சில நேயாளிகளையும் மீட்டுவந்தனர்.
ஆனால், படைகளை வாபஸ் பெறாவிட்டால் சனிக்கிழமை காலை முதல் அனைத்து பணயக் கைதிகளையும் சுட்டுக் கொல்லப் போவதாகதீவிரவாதிகள் கூறியிருந்தனர். அவர்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்தனர். மேலும் பணயக் கைதிகள் பலர் மீதும்குண்டுகளைக் கட்டி வைத்தனர்.
தீவிரவாதிகளை பாதுகாப்புடன் வெளியேற அனுமதி தருவதாகவும் பணயக் கைதிகளை உடனே விட்டுவிடும்படியும் ரஷ்ய அதிகாரிகள்பேச்சு நடத்திப் போர்த்தனர். ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
அந்த அரங்கத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறப்பு அதிரடிப்படையினர் தயார் நிலையில் இரவும் பகலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் விதித்திருந்த கெடு முடிவடைந்தது. இதையடுத்து ஏற்கனவே மிரட்டியிருந்தபடி பணயக்கைதிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ல ஆரம்பித்தனர். இரு பணயக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்ட மறு வினாடியே ரஷ்ய அதிரடிப்படை வீரர்கள் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தனர். அந்தக்கட்டதத்துக்குள் தூக்க வாயுவை செலுத்திய படையினர் ஒரு பக்க சுவரை குண்டு வைத்து தகர்த்துக் கொண்டு உள்ளே சென்றுதீவிரவாதிகளை சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 32 தீவிரவாதிகள் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களை சுட்டுக் கொண்ட பணயக் கைதிகளையும் பாதுகாப்பாக ரஷ்ய வீரர்கள் வெளியேற்றினர். இதனால் 750 பணயக் கைதிகள்உயிருடன் தப்பிவிட்டனர்.
ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் சுமார் 90 அப்பாவி பணயக் கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
40 நிமிடத்தில் அதிரடித் தாக்குதலை நடத்தி பணயக் கைதிகளை ரஷ்யப் படைகள் மீட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சண்டையின்போது சில தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டதாகவும் தெரிகிறது. மேலும் சிலர் பிடிபட்டுள்ளனர்.
இப்போது அந்த கலை அரங்கில் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளையும், கண்ணி வெடிகளையும் செயல் இழக்கச்செய்யும் பணியில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டுள்ளன.
செசன்ய தீவிரவாதிகளுக்கு அல்-கொய்தாவின் உதவியும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியும் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. செசன்யாவில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியதால் ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒடுக்க தனது படைகளை அனுப்பியது ரஷ்யா.
கலை அரங்கில் நுழைந்த தீவிரவாதிகளின் தலைவன் மொவ்ஸார் பாராயேவும் கொல்லப்பட்டுவிட்டான்.
தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலையடுத்து செசன்யாவில் மிகக் கடுமையாக தாக்குதலை ரஷ்யா துவங்கியுள்ளது. செசன்ய தீவிரவாதிகள்விஷயத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா முழு ஆதரவு தந்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications