சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல்: ரூ. 4.25 கோடி செலவாகும்!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரித கதியில்நடந்து வருகின்றன. தேர்தலை நடத்த ரூ 4.25 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தைக் கொண்டு வந்த அதிமுக அரசு சென்னை மாநகராட்சி மேயராக இருந்தஸ்டாலினின் பதவியைப் பறித்தது. இதைத் தொடர்ந்து மேயர் பதவி காலியாக உள்ளது.

6 மாதத்திற்குள் இந்தக் காலியிடம் நிரப்பப்பட வேண்டும் என்பதால் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் தேர்தல்நடத்தப்படும் என்று தெரிகிறது.

தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணி முடிந்ததும் தேர்தல் தேதிஅறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலுக்கு ரூ. 4.25 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிதியைமாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்காவே இந்த முறையும் மேயர் தேர்தலில்போட்டியிடுவார் என்று தெரிகிறது. திமுக சார்பில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

அரசியல் போட்டியால் பதவியைப் பறித்து அதற்காக மக்கள் பணம் ரூ. 4 கோடியை வீணாக்கவுள்ளது அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+