கருணாநிதி கொடும்பாவி எரிப்பு: 11 இந்து முன்னணியினர் கைது
மதுரை:
இந்துக்கள்-திருடர்கள்" என்று ஒரு அகராதியில் போடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியதைக்கண்டித்து அவருடைய கொடும்பாவியை எரித்த 11 இந்து முன்னணி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 24ம் தேதி சிறுபான்மையினர் நடத்திய மாநாட்டில் பேசிய கருணாநிதி, ஒரு அகராதியில் "இந்துக்கள்" என்றசொல்லுக்கு "திருடர்கள்" என்று பொருள் கூறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இதைக் கடுமையாகக் கண்டித்த இந்து முன்னணியினர் சென்னை-அண்ணா சாலையில் கருணாநிதியின்கொடும்பாவியை எரித்தனர். அப்போது அவர்கள் கருணாநிதிக்கு எதிராகக் கோஷங்கள் போட்டனர்.
தகவல் கிடைத்ததும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று 11 இந்து முன்னணித் தொண்டர்களைக்கைது செய்தனர்.
பேரையூரில்...
இதற்கிடையே மதுரை மாவட்டம் பேரையூரில் கருணாநிதி கொடும்பாவியை எரிக்க முயன்ற 15 பா.ஜ.க.வினரைபோலீசார் கைது செய்தனர்.
இந்துக்கள் குறித்துத் தவறாக பேசியதற்காக கருணாநிதியைக் கண்டித்து பேரையூர் பகுதி பா.ஜ.கவினர் அவருடையகொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.
இதற்காக 15 பா.ஜ.கவினர் பேரையூரின் முக்கியப் பகுதியில் கூடி கொடும்பாவியை எரிக்க முயன்றனர்.
ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து 15 பாஜகவினரும்கைது செய்யப்பட்டனர்.
சிவசேனா எச்சரிக்கை:
இதற்கிடையே இந்துக்கள் குறித்த பேச்சுக்கு கருணாநிதி வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவருடைய வீட்டின் முன்சவப்பெட்டி போராட்டம் நடத்துவோம் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
வரும் 30ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டின் முன் தொடங்கி, சாந்தோம் சர்ச் கல்லறை வரைசவப்பெட்டி ஊர்வலம் நடத்துவோம் என்றும், அடுத்த மாதம் 7ம் தேதி தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவோம்என்று சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications