அழகர் கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து 2 மாணவர்கள் பலி
மதுரை:
மதுரை அருகே உள்ள புகழ்பெற்ற அழகர் கோவிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள்உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலைச் சுற்றிலும் பிரம்மாண்டமான சுற்றுச் சுவர்கள்எழுப்பப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஒரு சுற்றுச் சுவரின் அருகே நான்கு மாணவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அந்த நான்கு மாணவர்களுமேஇடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த நான்கு மாணவர்களையும் மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
மற்ற இரண்டு மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனத்த மழை காரணமாகவே அந்தச் சுவர் இடிந்து விழுந்ததாகக்கூறப்படுகிறது.
புராதன சிறப்பு வாய்ந்த அழகர் கோவிலையும் அதன் சுற்றுச் சுவர்களையும் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அரசு இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தச் சுவர்களைச்சுற்றியும் பெரிய பெரிய மரங்களும் புதர்களும் வளர்ந்ததால் தான் சுவர் இடிந்து விழுந்துள்ளது என்றும்அம்மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்ட போலீசார், கோவிலின் சுற்றுச் சுவர்களை சிறுநீர் கழிப்பதற்காகப்பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications