சபாநாயகர் முன் தர்ணா: திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து இரண்டாவது நாளாக இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சபாநாயகர் இருக்கைமுன் தர்ணா நடத்திய அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் அரசு நிபந்தனையின்றி பேச்சு நடத்த வேண்டும் என்றுகோரி நேற்று திமுக உறுப்பினர்கள் கோரினர். அவர்கள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து ஏற்கமறுத்தார்.
இதையடுத்து அவைக்குள் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பியதால் அவைக் காவலர்களை வைத்து அவர்களைசபாநாயகர் வெளியேற்றினார். மற்ற கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
காலையில் சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், அரசு ஊழியர் ஸ்டிரைக் குறித்துப் பேச வேண்டும் என்று திமுக உறுப்பினர்துரைமுருகன் கோரிக்கை எழுப்பினார். ஆனால் அதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி தர மறுத்தார்.
வறட்டு கெளரவம் வேண்டாம்:
துரைமுருகன் பேசுகையில், அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு பேச்சு நடத்த வேண்டும். கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்போகலாம். ஆனால், அரசு என்பது நிரந்தரமானது. எனவே அதற்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வறட்சிகெளரவத்தை விட்டுவிட்டு பேச்சு நடத்த முதல்வர் முன் வர வேண்டும் என்றார்.
இதையடுத்து துரைமுருகனுக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் துரைமுருகனுக்குஆதரவாகப் பேச ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், கடந்த ஒரு வாரமாக அரசு அலுவலகங்களேஇயங்கவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இந்தப் போராட்டத்தை தொடர விடுவது தமிழகத்துக்கு நல்லதல்லஎன்றார்.
சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பேன்:
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களுக்கு இனிமேல் எதுவும் தர முடியாது. 4 சதவீத அகவிலைப்படிஉயர்வை ஏற்றுக் கொண்டு அவர்கள் பணிக்கு வர வேண்டும். அதே போல பண விடுப்புக்கு அதிக நிதி தருவது போன்றகோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது. அதற்கு அரசிடம் பணம் இல்லை.
அரசின் வருவாயை எல்லாம் இவர்களுக்குக் கொடுத்துவிட்டு வளர்ச்சிப் பணிக்கு வெறும் 6 சதவீத பணம் தான் மிஞ்சுகிறது.அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?. இவர்களுக்கு 4 சதவீத டி.ஏ. கொடுக்க மட்டும் அரசுக்கு மாதம் ரூ. 22 கோடி கூடுதல்செலவாகும். ஆனால், கடந்த திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போய்விட்டது.
கொடுப்பதை வாங்கிக் கொண்டு பணிக்கு வர வேண்டும், இல்லாவிட்டால், அவர்களை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சுக்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது அமைச்சர் பொன்னையன் எழுந்து, அரசு ஊழியர்கள் முதலில் போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டு வரட்டும். அதன்பிறகு அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
பதிலுக்கு பதில் கோஷம்:
இதையடுத்துப் பேசிய துரைமுருகன், ஸ்டிரைக் செய்வதாக நோட்டீஸ் அனுப்பிய சங்கத்தை விட்டு விட்டு வேறு சங்கத்துடன் அரசுபேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது சரியல்ல என்றார். அப்போது அவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்கு ஆட்சேபித்து அதிமுகஉறுப்பினர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இந்த மோதல் நடந்து கொண்டிருந்தபோதே 3 அவசர சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா செய்தனர்.
அப்போது பொன்னையன் எழுந்து, திமுக உறுப்பினர்கள் அவையின் மதிப்பை குலைக்கும் வகையில் நடந்து கொள்வதால்,அவர்களை வெளியேற்றக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
வெளியேற்றம்:
இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாகதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும்வெளிநடப்புச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஎம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வது, கைது செய்வது போன்ற கடுமையா நடவடிக்கைகளைஅரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications