"இந்து" என்றால் யார்?: கருணாநிதிக்கு இல. கணேசன் விளக்கம்
சென்னை:
கருணாநிதி மேற்கோள் காட்டும் இந்தி அகராதியில் "இந்து" என்பதற்கு நூற்றுக்கணக்கான பொருட்கள்கூறப்பட்டுள்ளன. ஆனால் "திருடன்" என்ற பொருளை மட்டும் அவர் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றுபா.ஜ.கவின் அகில இந்திய செயலாளர் இல. கணேசன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
"இந்து" என்றால் "திருடன்" என்று விஷ்வகோஷ் என்ற இந்தி அகராதியில் போட்டுள்ளதாக கருணாநிதிகூறியுள்ளார்.
அந்த அகராதியை அவர் சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதில் "திருடன்" என்ற பொருள் மட்டும்போடப்படவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஈரானைச் சேர்ந்த பார்சி மொழியில் அமைந்துள்ள ஓலைச் சுவடிகளில் கூறியுள்ளபடி, நமது நாடு "இந்து" என்றுஅழைக்கப்பட்டு வந்துள்ளது, அது பின்னர் "இந்த்" என்று மாறியுள்ளது. நமது நாட்டு மக்கள் "இந்தி" என்றுஅழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஈரானியர்கள் பின்னர் இஸ்லாமுக்கு மாறிய பின்னர், "இந்து" என்ற வார்த்தைக்கு தவறான பொருளைஉருவாக்கினர். கபீர் (பாவிகள்), காலா (கருப்பர்கள்), லுத்தேரா (கொள்ளைக்காரன்), குலாம் (அடிமைகள்) என்றுஅவர்கள் பெயரிட்டுள்ளனர் என அந்த பார்சி மொழி ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அகராதியில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி குறிப்பிடும் அகராதியில் இந்த வார்த்தைகள் தவிர "இந்து" என்பதற்கு நூற்றுக்கணக்கான அர்த்தங்கள்தரப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் தனக்குத் தேவையான வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, "இந்து" என்றால் "திருடன்"என்று தவறாக அர்த்தம் கற்பிப்பது தவறானது, கண்டிக்கத்தகது என்றார் இல.கணேசன்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications