விரைவில் மேலும் 6,238 போலீசார் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இந்த நிதி ஆண்டுக்குள் சுமார் 5,138 புதிய காவலர்களும், 1,100 சப் இன்ஸ்பெக்டர்களும்நியமிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில்,
காவல்துறையில் காலியாகவுள்ள 10,000 காலியிடங்கள், அரசின் நிதி நிலைக்கு ஏற்பட படிப்படியாக நிரப்பப்படும்.
சுமார் 3,500 ஆண் போலீசாரும், 1,638 பெண் போலீசாரும் நியமிக்கப்படவுள்ளனர்.
பெண் போலீசாரைத் தேர்வு செய்யும் விதிமுறைகள் மிகவும் கடினமாக இருப்பது தெரிய வந்ததால், பல உடற்கூறுவிதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற சிக்கல்கள் எழாது.
செஞ்சி உள்பட 40 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications