காவிரி: பிரதமரை சந்திக்கிறார் பாண்டிச்சேரி முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரியில் காரைக்கால் பகுதிக்கு சேர வேண்டிய நீரை தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துமாறுபிரதமர் வாஜ்பாயிடம் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுக்கவுள்ளார்.

இதற்காக இன்று காலை அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.

அவருடன் பாண்டிச்சேரி அமைச்சர்களும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் சென்றுள்ளனர்.

நேற்று மாலையே அவர்கள் டெல்லிக்குப் புறப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரம் அந்தப் பயணம்ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை தான் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களுக்கு முன்பாகவே 17 எம்.எல்.ஏக்களும் சில அரசியல் தலைவர்களும் நேற்றே டெல்லி சென்று விட்டனர்.

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட்டவுடன், காரைக்கால் பகுதிக்கு வந்து சேர வேண்டியகாவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் பிரதமரைவற்புறுத்தவுள்ளனர்.

பின்னர் அவர்கள் துணைப் பிரதமர் அத்வானி மற்றும் வேளாண்துறை அமைச்சர் அஜித் சிங் ஆகியோரையும்சந்தித்து தங்கள் கோரிக்கையை வைக்கவுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+