தமிழக பஸ்சுக்கு தீ வைப்பு: லாரி உடைப்பு, அரசு பஸ்கள் மீதும் தாக்குதல்
பெங்களூர்:
பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழக லாரி உடைக்கப்பட்டது. 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கமுயற்சி நடந்தது. ஆனால், அவர்களை பயணிகளாக வந்த தமிழர்களும் பொது மக்களும் சேர்ந்து விரட்டித்ததால் பெரும் உயிர்ச் சேதம்தவிர்க்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முதல் காவிரியில் தமிழகத்துக்கு நீர் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வழக்கு காரணமாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து கன்னட வெறியர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவு சேலத்தில் இருந்து வந்த தனியார் பஸ்ஸை மெஜஸ்டிக் அருகே ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது. பயணிகளை உள்ளேயே வைத்துக்கொண்டு பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதில் பஸ்சின் பின் பக்க டயர்கள் எரிந்து போயின. தீ பஸ்சுக்குள் பரவும் முன் அதை பயணிகளும் பொது மக்களும் சேர்ந்துஅனைத்துவிட்டனர்.
இதே போல தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியை கும்பல் கல்வீசித் தாக்கியது. இதில் லாரியின் டிரைவர் காயமடைந்தார். லாரியில்இருந்த பொருள்களை அக் கும்பல் அள்ளிச் சென்றது.
அதே போல தமிழகத்தைச் சேர்ந்த 3 அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. பெங்களூரில் காலையில் இருந்தே ஒருவித பதற்றம் நிலவியதால்தமிழகத்தில் இருந்து வந்த பஸ்கள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. ஆனால், இரவு 7 மணிக்கு மேல் தமிழகபஸ்கள் பெங்களூருக்குள் வந்தன.
மெஜஸ்டிக் அருகே உள்ள குட்ஷெட் ரோட்டில் வந்த தமிழக பஸ்களை கன்னட வெறியர்கள் இரவில் தடுத்து நிறுத்தினர். பஸ்கள் மீதுபயங்கர கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் தமிழக பயணிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர்.
இந்த பஸ்களை நிறுத்திய கும்பல் டயரில் காற்றைப் பிடுங்கிவிட்டது. பின்னர் டீசல் டாங்கை உடைத்து டீசலை எடுத்து பஸ்களின் மீதுஊற்றிவிட்டு அக் கும்பல் தீ வைக்க முயன்றது.
இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் ஓடி வந்து அந்தக் கும்பலைத் தடுத்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும் இறங்கி அக் கும்பலைத்தடுத்தனர். பின்னர் பயணிகளும் பொது மக்களும் சேர்ந்து அந்தக் கும்பலை அடித்து விரட்டினர்.
பஸ்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பெங்களூர் போலீசார் எல்லாம் முடிந்தவுடன் ஓடிவந்து ஏன் பஸ்களை கொண்டு வந்தீர்கள். உடனேதிரும்பி தமிழகத்துக்கு பஸ்களை கொண்டு சென்றுவிடுங்கள் என்று கூறி தங்களது கையாலாகதனத்தை வெளிக் காட்டினர்.
இந்தச் சம்பவங்களையடுத்து இரவில் பல தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என கன்னட வெறியர்கள் எச்சரித்துள்ளதால் பெங்களூரில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவுஅமலாக்கப்பட்டுள்ளது.
வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications