வெளிநாடுகளில் குவியும் இந்தியர்கள்
ஐ.நா. சபை :
இந்தியர்களில் சுமார் 60 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக ஐ.நா. சபை தெரிவித்துளளது.
உலக அளவில் வெளிநாடுகளில் தனது மக்களை அதிகமாகக் கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள்சபை கூறியுள்ளது.
ஐ,நாவின் மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியர்கள் மிக அதிக அளவில் வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதே போல இந்தியாவில் வசிக்கும்வெளிநாட்டு அகதிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். இப்போது இந்தியாவில் 10.71 லட்சம் வெளிநாட்டினர் அகதிகளாகவசித்து வருகின்றனர்.
உலகின் மக்கள்தொகையில் 3 சதவீதம் பேர் தாங்கள் பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் குடியேறி வசித்து வருகின்றனர்.இதில் பெரும்பாலானவர்கள் குடியேறி வருவது அமெரிக்காவில் தான்.
2000ம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4.1 கோடியாகும். இவர்களில்இந்தியர்கள் 60.27 லட்சம் பேர் ஆவர்.
இந்தியர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் 50.25 லட்சம் பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 40.24 லட்சம்பேரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
உலக அளவில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வசிப்பது ஐரோப்பாவில் தான். ஐரோப்பிய நாடுகளில் 5.6 கோடி மக்களும்,ஆசியாவில் 5 கோடி மக்களும், அமெரிக்காவில் 4.1 கோடி மக்களும் குடியேறியுள்ளனர்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் 10 பேரில் ஒருவர் குடியேறிவர் என்பது குறிப்பிடத்தக்கது. வளரும் நாடுகளில் 70 பேரில்ஒருவர் குடியேறிவராவார். 1975ம் ஆண்டுக்குப் பின் வெளிநாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாகஅதிகரித்து வருகிறது.
1995 முதல் 2000ம் ஆண்டு வரை அமெரிக்காவில் மட்டும் 10.4 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.
ஆனால், செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் அனைத்து நாடுகளிலும் குடியேறுபவர்களின்எண்ணிக்கை அரசின் கட்டுப்பாடுகளால் குறைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் குடியேறவிரும்புபவர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டன.
இவ்வாறு ஐ.நா. சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications