நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட்: அரசு ஊழியர்களுக்கு ஜெ. கெடு
சென்னை:
போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் ஒட்டுமொத்தமாகபதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா கெடு விதித்துள்ளார்.
டி.ஏ. மற்றும் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம்நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த வரும் அரசு அத்தியாவசியப் பணிகள் சட்டத்தை (எஸ்மா)அமலாக்கியுள்ளது.
இதன் கீழ் பல்வேறு ஊழியர்கள் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர். பல தொழிற்சங்க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தினமும் அரசு ஊழியர்கள் பலர் இடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் அனைவரையும்ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியில் நியமிப்போம் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் பேசிய ஜெயலலிதா,
போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். அவர்கள் நாளைமாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பியவர்களுக்கு போராட்டம் நடந்த காலத்துக்கு ஊதியம்கிடைக்காது. ஆனால், அவர்களுக்கு எதிராக வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
ஆனால், நாளை மாலைக்குள் பணிக்குத் திரும்பாத ஊழியர்களை அரசு ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யும்.
இவர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்களை அரசு பணியில் சேர்க்கும். ஆசிரியர் பதவிகளுக்கும் புதியவர்கள்நியமிக்கப்படுவார்கள் என்றார்.
கடந்த இரு நாட்களாக சட்டசபையில் இந்த விவகாரம் வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மூன்றாவதுநாளாக இப் பிரச்சனையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. அதன் உறுப்பினர் பழனிச்சாமி அரசு ஊழியர் வேலை நிறுத்தம்தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஜெயலலிதா பதில் அளித்த போது தான் இதனைத் தெரிவித்தார்.
நேற்று பேசிய ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தால் வரட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications