தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்ப கோரிய மனு தள்ளுபடி
பெங்களூர்:
நிறுத்தப்பட்டுள்ள தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரில் உள்ள ஜெகஜீவன்ராம் நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இது தொடர்பாகத் தாக்கல் செய்தமனுவில்,
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 5ம் தேதி முதல் கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பப் படுவதுநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகத் தியேட்டர்களில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்கர்நாடகத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அம்மாநில அரசின் கடமை.
எனவே தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வராஜ்அம்மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனு தொடர்பாக எந்தவிதமான விசாரணையுமே நடத்தாமல் நீதிபதி வி.ஜி. சாபாஹித் அம்மனுவைஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்துவிட்டார்.
தமிழர்கள் தர்ணா:
இதற்கிடையே தமிழ் சேனல்களை மீண்டும் ஒளிபரப்பக் கோரி பெங்களூரில் உள்ள ஒரு போலீஸ் நிலையம்முன்பாகத் தமிழர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள போலீ"ஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்,தமிழ் சேனல்களை உடனடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், வரும் நவம்பர் 1ம் தேதி காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்இறுதித் தீர்ப்பை வழங்குகிறது. அதன் பின்னர் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்போம் என்றுஉறுதியளித்தனர்.
இதையடுத்து தமிழர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.
-->












Click it and Unblock the Notifications