கர்நாடக அதிமுக செயலாளர் வீட்டில் கன்னட வெறியர்கள் தாக்குதல்
சென்னை:
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வீடு மீது கன்னட வெறியர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
கர்நாடக அதிமுக செயலாளரான புகழேந்தியின் வீடு பெங்களூர்-ஜெயநகரில் 2வது பிளாக்கில் உள்ளது.
நேற்று அவருடைய வீட்டுக்குள் புகுந்த 12 கன்னட வெறியர்கள் பயங்கரமான வெறித் தாக்குதலை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், புகழேந்தியையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கோஷம்எழுப்பியவாறே அவர்கள் புகழேந்தியின் வீட்டைச் சூறையாடினர்.
சம்பவம் நடந்தபோது புகழேந்தி சென்னை சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி குணஜோதி, மாமனார்சக்கரபாணி, மாமியார் மணியம்மா, ஒன்றரை வயது மகன் ஜெயசிம்மன் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
வீட்டிற்குள் புகுந்தவுடனேயே கன்னட வெறியர்களில் ஒருவன் குழந்தை ஜெயசிம்மனை மணியம்மாவிடமிருந்துபிடுங்கினான். ஆனால் அவர் கெஞ்சிக் கதறிய பின்னரே குழந்தையை அவன் திரும்பக் கொடுத்தான்.
பின்னர் சக்கரபாணியை கிரிக்கெட் மட்டையால் தாக்க முயற்சி செய்தனர். இருதய நோயாளியான அவர் உடனேசத்தம் போட்டு மயங்கிச் சரிந்தார்.
சத்தம் கேட்டு வந்த புகழேந்தியின் மனைவியையும் மணியம்மாவையும் அந்தக் கன்னட வெறியர்கள்பயங்கரமாகத் தாக்கினர். இதில் குணஜோதியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் வீட்டில் இருந்தபொருள்களையும் இக் கும்பல் சூறையாடியது.
டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். ஏராளமான பொருட்களை இக் கும்பல் கொள்ளையடித்துக்கொண்டும் சென்றுள்ளது.
போவதற்கு முன் "புகழேந்தியை எச்சரிக்கையாக இருக்கச் சொல். ஆளுநர், முதல்வரிடம் புகார் சொல்லும்வேலையெல்லாம் வேண்டாம்" என்று அவருடைய மாமனாரிடம் கூறி மிரட்டி விட்டு அவர்கள் சென்றனர்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து வந்த புகழேந்தியின் மகன் ராஜா பதறிப் போய் அனைவரையும்மருத்துவமனையில் சேர்த்தார்.
கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும், தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும் தமிழ்ப் படங்கள்நிறுத்தப்பட்டது குறித்தும் சமீபத்தில் தான் கர்நாடக ஆளுநர் சதுர்வேதி மற்றும் முதல்வர் கிருஷ்ணா ஆகியோரைச்சந்தித்து புகழேந்தி புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ. கண்டனம்:
இதற்கிடையே புகழேந்தியின் வீடு தாக்கப்பட்டதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புகழேந்தியின் பெங்களூர் வீட்டில் சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த முரட்டுத்தனமான தாக்குதல்வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து, தமிழகத்திற்கு நீர் திறந்து விடவும்உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் எதிரொலியாகவே கர்நாடகத்தில் உள்ள அப்பாவித் தமிழர்களைஅச்சுறுத்தும் வகையில் புகழேந்தியின் வீட்டில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கன்னடர்கள் அனைவரும் அமைதியுடனும், பாதுகாப்புடனும், எந்தவிதமான அச்சுறுத்தலும்இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழரின் நலனையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்குஉள்ளது.
எனவே தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்து தமிழர்களிடம்நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications