கே.ஆர். சாகர் அணையை கைப்பற்ற விவசாயிகள் முயற்சி

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப் பட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ண ராஜ சாகர் அணையை முற்றுகையிடச் சென்ற100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டனய்யா தலைமையில் அணையை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

அந்த அணையைக் கைப்பற்றி நீர் திறந்துவிடப் படுவதை நிறுத்துவோம் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடிதான் சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் அணையை நெருங்குவதற்கு முன்பாகவே அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இருந்தாலும் விவசாயிகள் கோஷம் போட்டவாறே அங்கிருந்த ஒரு பஸ்சுக்குத் தீ வைத்தனர். இதையடுத்து அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரும் அருகில் உள்ள கிராமத்தினரும் உடனடியாகத் தீயை அணைத்து பஸ்சில் உள்ளவர்களையும்வெளியேற்றினர்.

இதற்கிடையே மூன்று விவசாயிகள் திடீரென்று அணையை நோக்கி ஓடினர். அணையில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டே அவர்கள் ஓடினார்கள்.

ஆனால் போலீசார் அவர்களைத் துரத்தி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இவர்களைத் தவிர மேலும்நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம் போன்ற இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து மைசூர் அரண்மனைக்குள் நுழைய முயன்ற 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கபினி அணையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முகாம் போட்டுள்ளனர். இங்கிருந்துதமிழகத்திற்கு நீர் திறந்துவிடப் பட்டால் அதை உடனடியாகத் தடுப்போம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி கைதான மண்டியா மாவட்ட விவசாயிகள்போராட்டக் குழுத் தலைவர் மாடே கவுடா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆத்மானந்தா உள்ளிட்ட 16 பேரை நீதிமன்றக்காவலில் வைக்க மண்டியா நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மீறிப் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டஅவர்களை வரும் நவம்பர் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துஅவர்கள் அனைவரும் பெங்களூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+