ரஜினி படத்தில் நடிக்கப் போகும் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரஜினியின் அடுத்த படத்திற்கான கதைக் கரு கிட்டத்தட்ட ரெடியாகி விட்டதாம். முழுக்க முழுக்க அரசியலை மையமாகக் கொண்டதாம் இந்தப் புதியபடம். இந்தப் படத்திற்குப் பிறகு நேரடியாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

பாபாவில் கிடைத்த அடி, தொடர்ந்து பல முனைகளிலிருந்து வந்த விமர்சனங்கள், தாக்குதல்களால் நொந்து போயிருந்த ரஜினி இப்போது அந்தஅதிர்ச்சிகளிலிருந்து வெளியே வந்து விட்டாராம்.

உண்ணாவிரதம் இருந்து, மக்களை நாடி பிடித்துப் பார்த்த ரஜினி, மீண்டும் ஒரு படம் செய்து அதன் மூலம் சரிந்து போய் விட்ட தனது இமேஜை நிலைநிறுத்த முடிவுசெய்துள்ளாராம்.

இந்தப் படம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவாக இருக்கும் என்கிறார்கள்.

படத்தை கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ட் செய்யலாம் என்றார்கள். அதே நேரத்தில் ஷங்கருடன் பேசி வருகிறார் ரஜினி.

படத்தில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த கேரக்டரின் மூலம் தனது மனதிற்குள்இருக்கும் பல்வேறு கருத்துக்களையும் மக்களிடம் சொல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

பாபா படத்திலேயே ப.சி. பாத்திரத்தில் கந்தன் என்ற கேரக்டரை நடிக்க வைத்தார் ரஜினி. ஆனால், படம் ஊத்தியதால் அந்த கேரக்டர்குறித்த பேச்சும் அடிபட்டுவிட்டது.

இந் நிலையில் நேரடியாக ப.சியையே களத்தில் இறக்க ரஜினி முடிவு செய்துவிட்டார். ரஜினியின் படத்தில் நடிக்கப.சிதம்பரமும் ஓ.கே சொல்லி விட்டாராம்.

ரஜினியை நம்பித் தான் தனியாக கட்சியே நடத்தி வருகிறார் ப.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பாபாவைப் போல விளம்பரப்படுத்தாமல், மிகவும் கமுக்கமாக எடுத்து முடிக்கவும் ரஜினி தரப்புஉஷாராக உள்ளதாம்.

தீபாவளி முடிந்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

இதற்கிடையே பாபா படம் தட்டுத் தடுமாறி, முட்டி மோதி, மூச்சுவாங்கி தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.ஸாரி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+