கர்நாடகத்துக்கு மன்னிப்பு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
டெல்லி:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கர்நாடக அரசு அவமதித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன்று கர்நாடக மாநிலம் உதயமான தினமான ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு செப்டம்பர் 3, அக்டோபர் 4ம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகஅரசு மதிக்கவில்லை. நீரைத் திறந்துவிடாமல் பாத யாத்திரை நடத்தி நீதிமன்றத்துக்கே சவால் விட்டார் முதல்வர் கிருஷ்ணா.
இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. இதனை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கடும் கண்டனம்தெரிவித்தனர்.
உடனே தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட வேண்டும், விவசாயிகள் எதிர்ப்பார்கள் என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லக் கூடாதுஇதைச் செய்யத் தவறினால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் கர்நாடக அரசுநீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
நவம்பர் 1ம் தேதி (இன்று) வரை கர்நாடகத்துக்கு அவகாசம் தந்திருந்தனர். இதையடுத்து மன்னிப்பு கோரி கர்நாடகம் மனுதாக்கல் செய்தது.
தமிழகத்துக்கு கடந்த 4 நாட்களாக நீரையும் திறந்துவிட்டுள்ளது. இந்த நீர் தமிழக, பாண்டிச்சேரி விவசாயிகளுக்குப் போய்ச்சேர்ந்ததா, மேட்டூருக்கு எவ்வளவு நீர் வந்து சேர்ந்தது ஆகிய விவரங்களை இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தாக வேண்டும்.
இதன் பின்னர் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. தமிழகத்தின் குறுவை மற்றும் சம்பா பயிர்களை நாசம் செய்தகர்நாடகத்துக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications