தலைமை ஆசிரியரின் தற்கொலையால் பணிந்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொள்ளாச்சி அருகே தலைமை ஆசிரியர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்தே,அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார்.

கடந்த 10 நாட்களாக நடந்து வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதிலேயேஜெயலலிதா தீவிரம் காட்டி வந்தார்.

இந் நிலையில் நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்காசிப்பாண்டியன் அரசை எதிர்த்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உதவி தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்திற்காக குழுமி நின்ற ஏராளமானஆசிரியர்கள் மத்தியில் அவர் தற்கொலையில் இறங்கினார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது மனைவியும் ஒரு ஆசிரியை தான். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த தற்கொலை அரசை உலுக்கிவிட்டது. இந்தத் தற்கொலையால் போராட்டம் மேலும் வேகமாகும் என்றுஉளவுப் பிரிவினர் ஜெயலலிதாவை எச்சரித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களும் கூட இதனால் போராட்டத்துக்கு வர வாய்ப்புள்ளதாக உளவுப்பிரிவினர் எச்சரித்ததால் ஜெயலலிதா உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்துடன் பேச்சு நடத்த முன்வந்தார்.

இதையடுத்து அரசு, ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டுபேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அவர்களும் உடனே பேச்சு நடத்த முன் வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை பேச்சு நடந்தது. அவர்களது கோரிக்கைகள் ஓரளவுக்கு ஏற்கப்பட்டகால்போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+