ஸ்டாலின் மீது அதிமுக புதிய ஊழல் குற்றச்சாட்டு
சென்னை:
மழை நீர் வடிகால் வசதி செய்வதாக கூறி ரூ. 25 கோடி அளவுக்கு முன்னாள் சென்னை மேயர் மு.க.ஸ்டாலின்ஊழல் செய்து விட்டதாக நி அமைச்சர் பொன்னையன் புகார் கூறியுள்ளார்.
வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதிமுக சார்பில்இலவச அரிசி வழங்கப்பட்டது. நிதியமைச்சர் பொன்னையன் இந்தப் பொருட்களை வழங்கிப் பேசினார்.
அவர் கூறியதாவது: சென்னை நகரில் மழை நீர் வடிகால் வசதி செய்வதாக கூறி ரூ. 25 கோடியில் ஸ்டாலின்காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அந்த பணத்தில் பெரும் முறைகேடு செய்து விட்டார் ஸ்டாலின். ஸ்டாலினின் முறைகேடுகளும், அவரதுஅதிகாரத்தில் நடந்த நிர்வாக சீர்கேட்டினாலும் தான் இந்த மழையின்போது சென்னை நகர மக்கள் பெரும்அவதிக்குள்ளாக நேரிட்டுள்ளது.
திமுகவினரின் முறைகேடுகளால் லட்சோப லட்சம் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டிய அவல நிலைஏற்பட்டு விட்டது. தூர் வாருகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு கொடுத்த நிதியையும் சுருட்டிவிட்டார்கள்திமுகவினர் என்றார் பொன்னையன்.
ரூ. 50,000 இழப்பீடு:
இதற்கிடையே, தமிழகத்தில் கன மழைக்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவிவழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழைக்கு ஏராளமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதில் பல்வேறு பகுதிகளில் வீடு இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கார்த்திக்,விமலா, தனம்மாள், சையத் முகம்மது, நிசிமுதீன், மஞ்சு, ஜெரால்டு, பவுன்ராஜ் ஆகியோர் இறந்துள்ளனர்.
இவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications