இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கி 6 பேர் சாவு
அம்பாலா:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாயினர்.பைலட் பத்திரமாக தரையிறங்கிவிட்டார்.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் இந்த விபத்து நடந்தது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் இரு வீடுகள் மீது இந்த விமானம் மோதி வெடித்தது. இதில் இரு வீடுகளுமே தரை மட்டமாயின.அதில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். நேற்று நான்கு உடல்களும் இன்று இரு உடல்களும் மீட்கப்பட்டன.
விமானத்தின் பிளாக் பாக்ஸ் இன்று கட்டிட இடிபாடுகள் இடையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டது.
விமானத்தை ஓட்டிய பிளைட் லெப்டிணன்ட் ரெஹானி கடைசி நொடியில் பாராசூட் மூலம் குதித்ததால் உயிர் தப்பினார். அவரதுமுதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் மிகத் திறமையான விமானி என்ற பெயர் பெற்றவர். இதனால் விமானக் கோளாறு தான் விபத்துக்குக் காரணமாக இருக்க முடியும் எனவிமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒரு விபத்து தான் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டசும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இந்திய விமானப் படையில்உள்ள மிகப் பாதுகாப்பான விமானம் ஜாகுவார் தான். தொடர்ந்து வரும் விமான விபத்துக்கள் குறித்து விவாதிக்க விமானிகள்,பொறியாளர்கள், அதிகாரிகளின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.
மிகக் குறைவான உயரத்தில் பறந்து, ரேடார்களில் இருந்து தப்பி, எதிர் நாட்டின் மீது குண்டு மழை பொழியும் விமானம் இது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications