இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசிடம் வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வைகோவின் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் பல தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹாவுக்கு வைகோ கடந்த 5ம் தேதி சிறையிலிருந்து தந்தி அனுப்பியுள்ளார். அந்தத் தந்தியில்,

கடந்த 24ம் தேதி கடலில் மீன் பிடிப்பதற்காக ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்ற 16 மீனவர்களையும், அதைத்தொடர்ந்து 27ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கனப்பேட்டையிலிருந்து கடலுக்குள் சென்ற 28மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அந்த மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய படகுகளையும் இலங்கைகடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தநடவடிக்கைகளால் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை அந்நாட்டுசிறைகளிலிருந்து விடுவிக்க உடனடியாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ அந்தத் தந்தியில் கூறியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+