For Daily Alerts
Just In
வறுமை... வறுமை... 3 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை
சேலம்:
சேலம் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கிணற்றில் 3 குழந்தைகளை வீசிக் கொன்று விட்டு தாய் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராயன். கட்டட கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜோதி.
சமீபத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே போன ஜோதி, நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஜோதியையும், குழந்தைகளையும் தேடினர்.
அப்போது புதுப்பேட்டையில் உள்ள ஒரு மாவு மில்லின் பின்புறம் உள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளும்பிணமாக மிதந்தது தெரிய வந்தது. பக்கத்திலேயே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜோதி பிணமாககிடந்தார்.
வறுமை காரணமாக ஜோதி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-->


