நேபாள விமானத்தைக் கடத்தி டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டம்?
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து விமானத்தைக் கடத்தி, டெல்லியில் உள்ள பிரதமர்அலுவலகக் கட்டிடம் அல்லது அவரது வீட்டில் தாக்குதல் நடத்துவதற்கு பின்லேடனின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதுதெரியவந்துள்ளது.
சென்னை விமானப் போக்குவத்துறை அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின்லேடனின் ஆட்கள் காத்மண்டுவில் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் நேபாளவிமானங்களைக் கடத்தி, டெல்லியில் உள்ள முக்கியக் கட்டடங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளததாகவும்கூறப்பட்டிருந்தது.
டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் மீதோ அல்லது அவரது இல்லதத்தின் மீதோ தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதுஎன்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு சில மர்ம ஆசாமிகளிடம் இருந்து, மிரட்டல் கடிதம்வந்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து நாங்கள், காத்மண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பும் 13 விமானங்களின்பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உடனே தெரிவித்துவிட்டோம்.
இந்த மிரட்டல் உண்மையாகவோ அல்லது வதந்தியாகவோ இருக்கலாம். இருப்பினும் இதுபோன்ற பதட்டமானசூழ்நிலைகளில் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இதுகுறித்து ராயல் நேபாள் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ராஜ் கூறுகையில்,
இந்த மிரட்டல் குறித்த தகவல் வந்தவுடன் நாங்கள் எங்கள் விமானங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்திவிட்டோம்.
உண்மையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு எங்கள்விமானங்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்றார்.
கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஐ.சி.184 ரக விமானத்தை, காஷ்மீர் தீவிரவாதிகள்காத்மண்டுவிலிருந்து கடத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள காண்டஹரில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications