கொட்டும் மழையிலும் "கடமை தவறாத" முகமூடி கொள்ளையர்கள்
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி 3 வீடுகளில் முகமூடிக் கொள்ளைகள் நடந்துள்ளன.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக உள்ளது.
கொட்டும் மழைக்குப் பயந்து பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ள நிலையில், திருடர்களுக்கோ இது வேறு விதத்தில்மிகுந்த கொண்டாட்டத்தைக் கொடுத்துள்ளது.
கொட்டும் மழையில் திருடினால் தடயங்கள் சிக்காது, யாரும் பார்க்க மாட்டார்கள், போலீஸார் வரவே மாட்டார்கள் என்ற தைரியத்தில் தங்கள்"கடமை"யைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் என்ற கிராமத்தில், அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளில் முகமூடிக் கொள்ளைகள் நடந்துள்ளன.
அஷ்டலட்சுமி நகர் என்ற பகுதியில் இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவங்கள் நேற்று இரவு நடந்துள்ளன.
வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை மிரட்டினர். மிரட்டலில் சப்த நாடியும் ஒடுங்கிப் போன அவர்கள் தங்களிடமிருந்த நகை,பணத்தைக் கொள்ளையர்களிடம் கொடுத்தனர்.
அவற்றைப் பிடுங்காத குறையாகப் பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் இருளில் மழையினூடே தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications