பெங்களூரில் 5 தமிழ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்
பெங்களூர்:
பெங்களூரில் பதுங்கியிருந்த 5 தமிழ் தீவிரவாதிகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து பெட்டிபெட்டியாக வெடிபொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூர்-பானசாவடி ரயில் நிலையம் அருகே சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைகளில் பைகளுடன்இரண்டு பேர் திரிந்து கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
பிடிபட்டவர்களின் பெயர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமார் என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்தபைகளைச் சோதனையிட்ட போது அதில் பைப் வெடிகுண்டு, கையெறி குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள்இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
இதையடுத்து அவர்களை நன்றாகக் "கவனித்த" போலீசார் டிக்கன்சன் ரோடு மற்றும் கூக்ஸ் ரோடு ஆகியஇடங்களில் உள்ள அவர்களுடைய வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர். அங்கு குமார், ரவி, ஸ்ரீனிவாசன்ஆகிய மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அங்கு பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகளும், வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் பொருட்களும்இருப்பதைக் கண்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பெட்டிகளிலிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 1,200 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 970டெட்டனேட்டர்கள், 500 கிராம் பொட்டாசியம் நைட்ரேட், 9 கையெறி குண்டுகள், 75 துப்பாக்கிக் குண்டுகள், 13பைப்புகள், பேட்டரி, ப்யூஸ் ஒயர் உள்ளிட்ட சகல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செல்போன் ஒலி மற்றும் கேமராவின் பிளாஷ் லைட் வெளிச்சம் பட்டவுடனேயே பயங்கரமாக வெடித்துச் சிதறும்அளவுக்கு எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம்வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்தனர்.
இவ்வளவு வெடிபொருட்களையும் ஒரே இடத்தில் கைப்பற்றிய போலீசார் பெரிதும் அதிர்ந்து போயுள்ளனர்.இதுபோன்ற பயங்கரமான வெடிபொருட்களைப் பார்த்ததே இல்லை என்று வெடிகுண்டு நிபுணர்கள்தெரிவித்தனர். இவை வெடித்திருந்தால் நினைக்க முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும்அவர்கள் கூறினர்.
கைதான விஜயகுமார் என்ற தீவிரவாதி பெங்களூரில் உள்ள மகாதேவபுரா பிரிசெஷன் டெலிகாம் நிறுவனத்தில்என்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கையில் செயல்படும் "பிளாட்" அமைப்பிடம் வெடிகுண்டுமற்றும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மற்ற நான்கு தீவிரவாதிகளுக்கும் விஜயகுமார் தான் தீவிரமான பயிற்சிகளைக் கொடுத்துள்ளார். அதன்படி தான்இவ்வளவு வெடிபொருட்களையும் அவர்கள் தயாரித்து வைத்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை சேகரித்து வெடி பொருட்களையும்வெடிகுண்டுகளையும் இவர்கள் தயாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் எதற்காக இவ்வளவு ஆயுதங்களையும் பெங்களூரில் பதுக்கி வைத்திருந்தனர்? அவர்களுடையநோக்கம் என்ன? வெடிபொருட்களை எல்லாம் யாரிடமிருந்து சப்ளை செய்தார்கள்? இவர்களுக்குப்பின்னணியில் இன்னும் எத்தனை பேர் உள்ளனர்?
இத்தனையையும் பற்றி விசாரிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாககடந்த 1991ம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழ்ப்பெண்களும் கற்பழிக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கவே இந்தத் தமிழ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும்ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைப் பார்வையிட்ட கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே,தீவிரவாதிகளைப் பிடித்த போலீசாருக்கு தலா ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications