வங்கக் கடலில் புயல் சின்னம்: கடலூர்-நெல்லூர் இடையே நாளை கரை கடக்கும்
சென்னை:
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைநீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் கூறியது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகவே சென்னை நகரை வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழை, நகரின்பல்வேறு சாலைகளைப் பெயர்த்து எடுத்துள்ளது. மழை நீரால் சூழ்ந்துள்ள பல பகுதிகள் சிறு சிறு தீவுகளாக மிதந்துகொண்டிருக்கின்றன.
தன்னுடைய வீட்டின் முன்பாகவும் இடுப்பு உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதைக் கண்ட தமிழக முதல்வர்ஜெயலலிதா, போர்க்கால அடிப்படையில் சென்னை நகரைச் சுத்தம் செய்யவும், பழுதான சாலைகளைச் சரிசெய்யவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் ஒரு புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
சென்னைக்குத் தெற்கே சுமார் 280 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் சின்னம் படிப்படியாகவடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடலூருக்கும் ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையேநாளை அது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடக்கு தமிழகத்தில் மிகப் பலத்த மழையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் கன மழையும் அடுத்த இரண்டுநாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
கடற்கரையோர மாவட்டங்களில் கடும் சூறாவளி வீசும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-->
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications