"மழை பெய்வதால் காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்டுவிடக் கூடாது": ராமதாஸ்
சென்னை:
தற்போது தமிழகத்தில் நன்றாக மழை பெய்து கொண்டிருப்பதால் அதைக் காரணம் காட்டி காவிரி விவகாரத்தைதமிழக அரசு கிடப்பில் போட்டு விடாமல் அடுத்த ஆண்டாவது இந்தப் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
வடகிழக்குப் பருவமழை தற்போது முழு வீச்சில் பெய்து கொண்டிருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளும்மக்களும் மகிழ்ந்து போயுள்ளனர்.
ஆனால் இதைக் காரணம் காட்டி காவிரி விவகாரத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிடக் கூடாது.
காவிரி நீர் கிடைக்காத விவசாயிகள் இந்த ஆண்டு பட்ட துன்பங்களை அடுத்த ஆண்டும் சந்தித்துவிடக் கூடாது.
காவிரிப் பிரச்சனை அடுத்த ஆண்டு மீண்டும் விஸ்வரூபம் எடுக்காமல் அதற்குத் தக்கவாறு நடவடிக்கைகளைதமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
அரசு ஊழியர்களின் பல சலுகைகளைப் பறித்துள்ள தமிழக முதல்வர் தற்போது தேவையே இல்லாமல்அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இதனால் மட்டும் அனாவசிய செலவுகள் ஏற்படாதா?
கேரளாவைச் சேர்ந்த மக்கள் தமிழக காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஏராளமான மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.
இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைக் கோடுகள் சரியாக வரையறுக்கப்படாத காரணத்தால் தான்இத்தகைய அத்துமீறல்கள் தொடர்கின்றன. எனவே இதைச் சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தை இரண்டு மாநிலமாகப் பிரித்தால் தான் நலத் திட்ட உதவிகளை வேகமாகச் செயல்படுத்த முடியும்.தமிழகமும் வேகமாக முன்னேறும் என்றார் ராமதாஸ்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்கள் என்று கேட்டதற்கு, அது குறித்துதேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் முடிவு செய்யப்படும் என்று ராமதாஸ் பதிலளித்தார். அதிமுகவுடன்பாமக கூட்டணி சேருமா என்ற ஒரு நிருபரின் கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications