For Daily Alerts
Just In
5 புதிய அமைச்சர்கள் நாளை ராஜ் பவனில் பதவியேற்பு
சென்னை:
ஜெயலலிதா அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 பேரும் நாளை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில்பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாளை முற்பகல் 11.15 மணியளவில் நடக்கும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர்ராமமோகன் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சராக அன்வர் ராஜா, ஊரகத் தொழில் துறை அமைச்சராக வடிவேலு, பிற்பட்டோர்நலத் துறை அமைச்சராக பாப்பா சுந்தரம், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராக தாமோதரன், வனம் மற்றும்சுற்றுச்சூழல் அமைச்சராக வைத்திலிங்கம் ஆகியோர் பதவியேற்கவுள்ளனர்.
இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று அந்தச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->


