கரூர் எம்.பி. தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
சென்னை:
கரூர் எம்.பி. தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
கடந்த 1999ல் நடந்த கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை 2,847வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சின்னசாமி தோற்கடித்தார்.
இந்நிலையில் சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிச்சாமிவழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில்,
இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டதாக மூன்று அதிமுகவினர் பிடிபட்டனர்.
மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லும் நடந்துள்ளது. எனக்கு சாதகமான ஓட்டுக்களை செல்லாதவைஎன்று கூறி நிராகரித்து விட்டனர்.
எனவே சின்னசாமி வெற்றி பெற்றதை ரத்து செய்து விட்டு, கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஓட்டுக்களை மீண்டும்எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும். நானே வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, கரூர் தொகுதி ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கடந்த 7ம் தேதிதன் தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இதையடுத்து கரூர் தொகுதி வாக்குப் பெட்டிகள் அங்கிருந்து நேற்று இரவு சென்னைக்கு மிகவும் பலத்தபாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. அவை பின்னர் உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மறு வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று சின்னசாமி இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கரூர் எம்.பி. தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றுதாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று சின்னசாமியின் சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நீதிபதி ராமமூர்த்தி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து விட்டு, மறு வாக்கு எண்ணிக்கையை உடனடியாகத்தொடங்க வேண்டும் என்று நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் உள்ள ஒரு அறையிலேயே பதிவாளர் முன்னிலையில் கரூர் எம்.பி.தொகுதிக்கான தேர்தலின் மறு வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, உயர் நீதிமன்றம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையைச் சுற்றிலும் ஆயுதமேந்திய போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.
1999ல் வாக்கு எண்ணிக்கை விவரம்:
மொத்த ஓட்டுக்கள் - 11,70,582
பதிவானவை - 7,19,705
செல்லாதவை - 16,906
எம். சின்னசாமி (அதிமுக) - 3,34,407
கே.சி. பழனிச்சாமி (திமுக) - 3,31,560
கே. நாட்ராயன் (தமாகா) - 45,539
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications