டான்சி நில ஒப்படைப்பு: சசிகலா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி நிலத்தை முடக்கி வைத்துள்ள உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு கோரியுள்ள சசிகலாவின் மனு மீதானதீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை அரசிடமே ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், எனவே டான்சி நிலத்தை முடக்கி வைத்துள்ளநீதிமன்ற உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு சசிகலா தரப்பில் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி சிங்காரவேலன் விசாரித்து வந்தார். இது தொடர்பான சில கேள்விகளை அவர்கேட்டிருந்தார்.
இதற்கான விளக்கத்தை நீதிமன்றத்தைத் தாக்கல் செய்த சசிகலாவின் வக்கீல் வாதாடுகையில்,
டான்சி வழக்கு தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் கூட, நிலத்தை முடக்கிவைத்துள்ளதற்கான உத்தரவை விலக்கி உத்தரவிட சிறுவழக்குகள் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
மேலும், டான்சி நிலத்தை மறுபடியும் டான்சி நிறுவனத்திடமே திருப்பித் தருவதால் எனது கட்சிக்காரருக்கு ரூ.3கோடி நஷ்டம் ஏற்படும்.
இருந்தாலும் தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் டான்சி நிறுவனத்திடமே இந்த நிலத்தை திருப்பித் தருவதற்குஎனது கட்சிக்காரர் விருப்பமாக உள்ளார் என்று வாதிட்டார்.
இந்த வாதத்திற்குப் பிறகு சசிகலாவின் மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதிசிங்காரவேலன்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications