சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக போட்டி: ஜெ. அறிவிப்பு
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியில் விரைவில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று தமிழகமுதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறினார்.
சாத்தான்குளம் தொகுதி தமாகா எம்.எல்.ஏவாக இருந்த மணி நாடார் ஒரு சில நாட்களுக்கு முன் உடல் நிலைசரியில்லாமல் மரணமடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதி காலியானது.
இந்தத் தொகுதிக்கு இன்னும் இடைத் தேர்தல் அறிவிப்பு குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் எந்த அறிவிப்பும்வெளியிடவில்லை.
இந்நிலையில் சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று இன்று ஜெயலலிதாநிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தமாகா தான் இந்தத்தொகுதியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்து விட்ட நிலையில், அதிமுக இத்தொகுதியில் தனித்தேபோட்டியிடும் என்று ஜெயலலிதா கூறினார்.
-->












Click it and Unblock the Notifications