வைகை அணை இன்று திறப்பு
தேனி:
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வந்த கன மழையைத் தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியைத்தாண்டி விட்டது.
இதையடுத்து அணையிலிருந்து பாசனத்திற்காக நீரைத் திறந்து விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் இன்று மாலை 6 மணிக்கு அணையின் மதகுகளைத் திறந்து தண்ணீர்திறந்து விடுவார்.
இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கையில் உள்ள 1.5 லட்சம் ஏக்கர் சம்பா விளை நிலங்கள் பயன்பெறும். தென் மேற்குப் பருவமழை பொய்த்து விட்டதால் கடந்த ஜூன் மாதம் இந்த அணையிலிருந்து நீர்திறந்துவிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணையின் நீர்மட்டம் தற்போது 61.3 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,190 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் மொத்தக் கொள்ளளவு 71 அடியாகும்.
இதற்கிடையே விரைவில் பெரியார் அணையும் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள்தெரிவித்தனர். இந்த அணையில் 122.5 அடி நீர் உள்ளது. இன்னும் 13.5 அடி நீர் வந்து சேர்ந்தால் அணை நிரம்பிவிடும்.
-->


