எய்ட்ஸ் நோயாளியை புறக்கணித்த அரசு மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

இந்தியாவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கு 100 மில்லியன் டாலர் பணத்தை வாரித் தந்த பில் கேட்ஸ் இந்தசெய்தியைக் கேட்டால் மனம் நொந்து போய் விடுவார்.

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு நபர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் கடந்த 5 நாட்களாகபடுத்துக் கிடந்தார். இவரைப் பார்த்த சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலஅதிகாரிகள், அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு எய்ட்ஸ் நோய் தாக்கிய அந்த நபரை எடுத்துச்சென்றுசிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு, மருத்துவமனையில் அனுமதித்தால்தான் மருத்துவம் பார்ப்போம், ரோட்டில் கிடப்பவர்களை மீட்பதுஎங்களது வேலை அல்ல என்று பதில் கூறியுள்ளனர் சில டாக்டர்கள்.

இதைக் கேட்டு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அத்தோடு நிற்கவில்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள். எய்ஸ்ட் தாக்கிய நபரை, ஏதாவது தொண்டுநிறுவனத்திலோ அல்லது நகராட்சியிடமோ ஒப்படைத்து விடுமாறு ஈவு இரக்கமின்றிக் கூறியுள்ளனர்.

இந் நிலையில் அந்த மனிதனைக் காப்பாற்ற ஊரக வளர்ச்சிக் கமிட்டி என்ற தொண்டு நிறுவனம் முன்வந்தது.ஆம்புலன்ஸ் தருமாறு அரசு மருத்துவமனையை அந்த அமைப்பு அணுகியபோது, கண்காணிப்பாளரிடம் அனுமதிபெற்று வாருங்கள் என்று கைகாட்டியுள்ளனர். ஆனால் கண்காணிப்பாளர் பணிக்கே வரவில்லை.

இதையடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை அணுகியபோது, இது எங்க வேலையா என்று பதில் கூறியுள்ளனர்.

இதையடுத்து திகைத்து நின்ற கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் கை கொடுத்தார்.அவரது ஆட்டோவில் எய்ட்ஸ் தாக்கிய நபரை போட்டுக் கொண்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அவரை தாங்கள் கவனித்துக் கொள்வதாக தொண்டு நிறுவனம் உறுதியளித்ததால் மருத்துவனை அதிகாரிகள் அந்தநோயாளியை மருத்துமனையில் அனுமதித்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து மாவட்ட நிர்வாகம்கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருப்பதாகவும்தெரிகிறது.

கலெக்டர் அலுவலக ஊழியர்களாலேயே அரசு மருத்துவமனையிலும் போலீஸ் நிலையத்திலும் காரியம்ஆகவில்லை என்றால் சாதாரண பொது மக்களின் நிலை என்ன?

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+