கோயம்பேடு பஸ் நிலையம் திறப்பு: ஆசியாவிலேயே பெரியது
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய வெளியூர்பஸ் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை துவக்கி வைத்தார்.
வேளாங்கண்ணி, பெங்களூர், காஞ்சிபுரம், நாகூர், திருவனந்தபுரம் ஆகிய நகர்களுக்குச் செல்லும் பஸ்களை கொடியசைத்து இந்தப் புதியபேரும்து நிலையத்தை அவர் துவக்கி வைத்தார்.
இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 270 பஸ்கள் புறப்படவும், இந்த பஸ் நிலையத்துக்கு வந்து சேரவும் முடியும். அவ்வளவுபிரம்மாண்டமானதாக இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இனிமேல் இங்கிருந்து தான் இயக்கப்படும். இந்தபஸ்கள் இனிமேல் சென்னை நகருக்குள் நுழையாது.
ஆம்னி பஸ்களும் இங்கிருந்து தான் இனிமேல் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் இனிமேல் சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள நகர்ப் பகுதியில் இனிமேல் நுழையக் கூடாது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.
இதனால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, நகருக்குள் வாகனப் புகையினால் ஏற்படும்மாசும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன் இந்தப் பேருந்து நிலையம்கட்டப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் 3 மிகப் பெரிய ரிசர்வேஷன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,500 அமரும்வகையில் மிகப் பெரிய வளாகமும், 60 தொலைபேசிகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆசியாவிலேயே பெரியது...
ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையமாக கோயம்பேடு பஸ் நிலையம் கருதப்படுகிறது.
இங்கு ஒரு நாளைக்கு 4,000 பேருந்துகள் வந்து செல்லும் வசதி உள்ளது. தினசரி சுமார் ஒரு லட்சம் பயணிகள்இந்தப் பஸ் நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 36.57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பஸ் நிலையத்தில் சகல வசதிகளும் உள்ளன.
இங்கிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் இணைப்பு பஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதுதவிர டாக்சிகள், கால் டாக்சிகள், ஆட்டோக்கள் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 ஹோட்டல்கள், 30 தேனீர் கடைகள், 500 ஆட்டோக்கள் நிறுத்தும் வசதி ஆகியவையும் உள்ளன.
கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த பஸ் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அடுத்து வந்த திமுக ஆட்சியில் 1997ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த பஸ் நிலையத்துக்கானஅடிக்கல்லை நாட்டினார்.
போக்குவரத்து மாற்றம்:
வெளியூர் பஸ்கள் அனைத்தும் தாம்பரத்திற்கு முன்பாகவே திருப்பி விடப்பட்டு நேரடியாக கோயம்பேடு சென்றுவிடும்.
இதன்படி தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் அரசு பஸ்கள் ஜவஹர்லால் நேரு சிலை, உள் வட்டப்பாதை, நெசப்பாக்கம் சாலை வழியாக கோயம்பேடு வந்து செல்லும்.
மேற்கு பகுதியில் இருந்து பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வரும் பஸ்கள் இனி கோயம்பேடு மார்க்கெட்சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக கோயம்பேடு பஸ் நிலையம் வந்து செல்லும்.
வடக்குப் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ்கள் உள் வட்டப் பாதை, கோயம்பேடு ரவுண்டானா, தேசியநெடுஞ்சாலை-5, கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக வந்து செல்லும்.
அது போலவே தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் ஆம்னி பஸ்கள், பிற சுற்றுலா வாகனங்கள் தேசியநெடுஞ்சாலை-5, தாம்பரம் இரும்புலியூர் புது பாலம், பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை-4, மதுரவாயல்,கோயம்பேடு மார்க்கெட் சாலை, நெசப்பாக்கம் சாலை வழியாக கோயம்பேடு வந்து செல்லும்.
ஜவஹர்லால் நேரு சிலையிலிருந்து வீல்ஸ் இண்டியா சந்திப்பு வரையிலான தூரத்திற்கு தினசரி காலை 8 மணி முதல்இரவு 8 மணி வரை கனரக சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதனால் சென்னை நகருக்குள் இனி போக்குவரத்து பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications