திட்டு.. திட்டு.. திட்டு..: இது பன்னீர் ஸ்டைல்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதை எதிர்க் கட்சித் கட்சித்தலைவர்கள் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் விமர்சித்து வருகின்றனர் என பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.
இது தொடர்பாக பன்னீர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தத் தலைவர்களுக்கு கெளரவமாக நடந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. ஜெயலலிதா மீது வெறுப்பை உமிழ்வது தான்இவர்களுக்கு வேலையே. உச்ச நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அதனால் தான் அந்தமன்றம் உத்தரவிட்டவுடன தனது கருத்துக்களை வாபஸ் பெற்று உடனே கடிதம் எழுதினார்.
கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு திட்டு:
ஜெயலலிதா எப்போதுமே யாருக்கு எதிராகவும் மிக மோசமான வார்த்தைகளை ஜெயலலிதா பயன்படுத்தியதே இல்லை. ஆனால்,கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் திமுக தலைவர் கருணாநிதியும் தான் மிக மோசமாக பேசி வருகின்றனர். அது அவர்களின்வழக்கமாகிவிட்டது.
ஜெயலலிதாவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாகக் கொண்டுள்ள கருணாநிதி காவிரி விவகாரத்தில் என்ன நிலை எடுத்தார். மத்தியஅரசை அவர் எந்த வகையிலாவது நிர்பந்தித்தாரா? தனது கட்சியினரை மத்திய அமைச்சர்களாக உட்கார வைத்துள்ள கருணாநிதி தமிழகவிவசாயிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இளங்கோவனுக்கு திட்டு:
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திடீரென முழித்துக் கொண்டது மாதிரி செயல்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கிருஷ்ணாவுக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்காத இளங்கோவன் போன்றவர்கள் இப்போது மட்டும் வாயைத் திறப்பது ஏன்?
ராமதாசுக்கு திட்டு:
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா மனம் போன போக்கில் செயல்படுவதாகக் கூறும் பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு முதல்வர் கூட்டியஅனைத்துக் கட்சிக் கூட்டம் மறந்து போனது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு எல்லோரையும் பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் திட்டியுள்ளார்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications