காவிரியை காத்த வள்ளியப்பன்
சென்னை:
காவிரி ஆற்றில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு வளர்ந்திருந்த ஆமணக்குச் செடிகளை தனி ஒரு மனிதனாய்செயல்பட்டு அகற்றி, காவிரி நீர் செல்ல வழி வகுத்த விவசாயி வள்ளியப்பனுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 3லட்சம் வழங்கி, அவரது பொதுச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வள்ளியப்பன். இவர்காவிரி வடகரைப் பகுதியில் குடியிருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மணல் பகுதியில் ஏராளமான அளவுக்கு காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்துதண்ணீர் செல்ல பெரும் தடையாக இருந்து வந்தது. இதைப் பார்த்த வள்ளியப்பனுக்கு அதை அகற்ற வேண்டும்என்ற நினைப்பு வந்தது.
இதற்காக அரசின் உதவியையோ அல்லது தன் ஊர்க்காரர்கள் உதவியையோ கோரவில்லை. தானே தனியாகசெயலில் இறங்கினார்.
தினசரி அதிகாலை ஆற்றுக்குக் கிளம்புவார். அங்கு வளர்ந்து கிடக்கும் காட்டாமணக்குச் செடிகளை வெட்டிஅகற்றத் தொடங்குவார். சூரியன் அஸ்தமனமான பிறகுதான் வீட்டுக்கு வருவார்.
இப்படியே தொடர்ந்து ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, 7 மாதம் இடைவிடாமல் உழைத்து, காட்டாமணக்குச்செடிகளை முற்றிலும் அகற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தொலைவுக்கு செடிகளை அகற்றி காவிரி தாராளமாக செல்ல வழி வகுத்துள்ளார்.
தனி மனிதராக, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பொதுச் சேவையை புரிந்துள்ள வள்ளியப்பன் குறித்துமுதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வளவு பெரிய செயலைச் செய்த வள்ளியப்பன் விவசாயக் கூலி தான். காவிரி வறண்டதால் விவசாயவேலைகளும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்.
மிகச் சிறிய குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு உதவ ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டி ரூ. 3 லட்சம் வழங்கிபாராட்டினார்.
இந்த எதிர்பாராத பாராட்டு மற்றும் பரிசால் மனம் நெகிழ்ந்து போயுள்ளார் பெரியவர் வள்ளியப்பன்.
29ல் காவிரி ஆணைய கூட்டம்:
இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 29ம் தேதி பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையம் கூடவுள்ளது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சேத்திகூறினார்.
அதற்கு முன்னதாகவே வரும் 25ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவும் கூடவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-->
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications