நாட்டின் முக்கிய நதிகளை இணைக்க குழு அமைப்பு
டெல்லி:
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க துணைப் பிரதமர் அத்வானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நதிகளை இணைத்து வறட்சியையும் வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் வரை மத்திய அரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதையடுத்துஅது தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
முதல்கட்டமாக இத் திட்டத்தை அமலாக்க முடியுமா, இதற்கு தேவைப்படும் நிதியின் அளவு, தேவைப்படும் புதிய சட்டங்கள்ஆகியவை குறித்து விவாதிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவுக்கு அத்வானி தலைவராக இருப்பார். இதில் நிதியமைச்சர்ஜஸ்வந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சேத்தி, மின்துறை அமைச்சர் ஆனந்த் கீதே, சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு, திட்டக் கமிஷன் தலைவர் கே.சி. பந்த் ஆகியோர் தவிர வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டின் முக்கிய வட பகுதி நதிகளை அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து வருவதால் இதில் எழும் சர்வதேசசிக்கல்களையும் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் சின்ஹாவையும் இக் குழுவில் பிரதமர் வாஜ்பாய்இடம் பெறச் செய்துள்ளார்.
நீர் வளத்துறை செயலாளர் கோஸ்வாமியும் இதில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களும் இக் குழுவில் சேர்க்கப்படுவர் என்று தெரிகிறது.
இத் தகவல்களை பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் குழு குறித்து விவரத்தை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருவதால் இந்தவிவரம் அங்கு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications