சேலம் ஜி.எச். விவகாரம்: டாக்டர், 3 நர்ஸ்கள் டிரான்ஸ்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் மற்றும் சிறுமி இறந்தது தொடர்பாக ஒரு டாக்டர், 3 நர்ஸ்கள்,ஒரு உதவியாளர் (ஆயா) ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நிடத்தவும்மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் டாக்டர் சி. ரவீந்திரநாத் உத்தரவிட்டார்.

குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செல்வராஜ், நர்ஸ்கள் சிவபாக்கியம், மீனாட்சி, ராஜேஸ்வரி மற்றும் ஆயாவிஜயராணி ஆகியோர் கடமையில் அலட்சியமாக இருந்ததற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்ரவீந்திரநாத் கூறினார்.

இவர்களது இடமாற்றம் தொடர்பான உத்தரவுகள் சேலம் மருத்துவமனை டீனுக்கு அனுப்பப்பட்டு விட்டது.இவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரசவத்திற்காக கொண்டு வரப்பட்ட சோலையம்மாள் என்ற பெண், டாக்டர்கள் உரிய நேரத்தில வராதகாரணத்தால் வயிற்றில் சிசுவோடு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மூச்சுத் திணறல் காரணமாக கொண்டு வரப்பட்ட சிறுமி பிரேமா, ஊசி போடப்பட்ட சிறிதுநேரத்திலேயே இறந்தார்.

இதையடுத்து சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.

ஆனால் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், பெரும் போராட்டத்தில் இறங்கப் போவதாக டாக்டர்கள்அரசுக்கு மிரட்டல் விடுத்தனர். இதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவை அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையில் ஒரு டாக்டர் உள்பட 4 பேர்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் அனில்குமார் தலைமையிலான விசாரணைக் குழு அளித்த அறிக்கையில் சோலையம்மாள் மற்றும் பிரேமாஇறந்த சம்பவத்திற்கு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் அலட்சியமே காரணம் என்று கூறப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+