சித்தி கொடுமை: கலெக்டரிடம் போலீஸ் அதிகாரியின் மகள் தஞ்சம்
சென்னை:
அப்பாவின் 2வது மனைவி செய்த கொடுமை தாங்காமல் போலீஸ் அதிகாரியின் மகளான 10 வயது சிறுமி வீட்டைவிட்டு ஓடிவந்து கலெக்டரிடம் தஞ்சம் புகுந்தாள்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுப்பராயலு நாயுடு.இவருக்கு அட்சயா என்ற 10 வயது மகளும், அஜய் தேவா என்ற 7 வயது மகனும் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலமின்மை காரணமாக சுப்பராயலுவின் மனைவியான சேதுலதா இறந்துவிட்டார் என்று தெரிகிறது.
இதையடுத்து தனது வீட்டில் வேலைக்காரியாக இருந்து வந்த பாரதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார் சுப்பராயுலு. விழுப்புரத்தில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
வேலைக்காரியாக வந்து, பின்னர் வீட்டு எஜமானியாக மாறிய பாரதி, சுப்பராயலுவின் முதல் மனைவிக்குப் பிறந்தஅட்சயாவை கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.
வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வது, செய்யாவிட்டால் சூடு போடுவது, கம்பால் அடிப்பது என சகலவிதமான"சித்தி" ரகக் கொடுமைகளை செய்யத் தொடங்கினார்.
முதலில் பொறுத்துக் கொண்ட அட்சயாவால் போகப் போக கொடுமைகளை தாங்க உடல் இடம் கொடுக்கவில்லை.
இதனால் யாரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் அட்சயா. எங்கு போவது என்று தெரியாமல்விழுப்புரம் நகர வீதிகளில் சுற்றித் திரிந்த அட்சயா பின்னர் ஒருவழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தாள்.
அங்கு கலெக்டர் முகம்மது அஸ்லமைச் சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் விட்டுக் கதறிஅழுதவாறு கூறினாள் அட்சயா.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் கலெக்டர். மேலும் அவரிடம், என்னை மதுரையில் உள்ள பாட்டி வீட்டில்ஒப்படைத்து விடுங்கள், மறுபடியும் அப்பா வீட்டிற்கு அனுப்பாதீர்கள் என்றும் அட்சயா கதறினாள்.
இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அபய்குமார் சிங்கிடம் குழந்தை அட்சயாவை அனுப்பியகலெக்டர், அவளை மதுரையில் உள்ள அவளுடைய பாட்டி வீட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலின் என்பவர் மூலம் அட்சயாவை அவளுடைய பாட்டி வீட்டில் ஒப்படைக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சுப்பராயுலு மற்றும் பாரதி மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதெரிகிறது.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications