தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பு: ஜெயலலிதா
சென்னை:
அதிமுகவைச் சேர்ந்த தமிழ் எம்.எல்.ஏவை கன்னட வெறியர்கள் கர்நாடக சட்டசபை வளாகத்தில் வைத்து தாக்கியதற்கு தமிழகமுதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகத் தமிழர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டியதுகிருஷ்ணா அரசின் பொறுப்பு என அவர் கூறியுள்ளார்.
கோலார் தங்கவயலைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. பக்தவச்சலம் விதான செளதாவில் வைத்தே கன்னட வெறிக் கும்பலால்தாக்கப்பட்டார். அவரைக் கொல்லவும் முயற்சி நடந்தது. தமிழனான உனக்கு கர்நாடகத்தில் அரசியல் வேண்டிக் கிடக்கிறதாஎன்று கேட்டு அவரை அக் கும்பல் தாக்கியது.
இந்த வன் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு கர்நாடகத்தின் அரசியலிலும் சமூக அமைப்பிலும் கன்னட வெறியர்கள்தலைதூக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த வெறிக் கும்பல்களை கட்டுப்படுத்த முடியாத கேவலமான அரசு ஆட்சியில் உள்ளது.
தமிழர் என்ற காரணத்தால் பக்தவச்சலத்தின் மீது நடந்துள்ள தாக்குதல் காட்டுத்தனமானது. காவிரிப் பிரச்சனையைச் சொல்லிதமிழர்களைத் தாக்குவது என்பது கர்நாடகத்தில் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், தமிழகத்தில் மக்களும் அரசும் பொறுப்புடன்நடந்து வருகின்றனர். இங்கு கன்னட மக்கள் அமைதியாகவும் பாதுகாப்புடனும் வசித்து வருகின்றனர்.
ஒரு எம்.எல்.ஏவையே சட்டசபையில் வைத்து கன்னட வெறியர்கள் தாக்கியிருக்கிறார்கள் என்றால் கர்நாடகத்தில் வசிக்கும்சாதாரண தமிழர்களின் நிலை என்ன? அவர்களுக்கு கர்நாடக அரசால் என்ன பாதுகாப்பை வழங்கிவிட முடியும்?
பக்தவச்சலத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டியது கிருஷ்ணா அரசின் பொறுப்பாகும். கன்னட வெறியர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பணிந்து தமிழர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும் கர்நாடக அரசின செயல் கேவலமானது.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications