தமிழ் சேனல்கள்: எதிர்பார்ப்பில் கர்நாடகத் தமிழர்கள்
சென்னை:
தமிழகத்தில் கன்னட டி.வி. சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டதையடுத்து, கர்நாடகத்திலும்விரைவில் தமிழ் சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அம்மாநிலத்தில் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
காவிரி விவகாரத்தையொட்டி கன்னட வெறி அமைப்பினர்களின் மிரட்டல் காரணமாக, கடந்த அக்டோபர் 5ம்தேதி முதல் கர்நாடகத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ் சேனல்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
அன்றிலிருந்தே கர்நாடகத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்கள் திரையிடப்படுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி திரையிடும் தியேட்டர்களை கன்னட வெறியர்கள் சூறையாடி வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்திலும் பல பகுதிகளில் கன்னட டி.வி. சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
காவிரி விவகாரம் ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும் கன்னட வெறியர்களுக்குப் பயந்து கொண்டே கர்நாடகத்தில்இன்னும் தமிழ் சேனல்கள் ஒளிபரப்போ, தமிழ் படங்கள் திரையிடப்படுவதோ இன்னும் மீண்டும்தொடங்கப்படாமலேயே இருக்கிறது.
மாதாந்திர கேபிள் கட்டணத்தை வசூலித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெங்களூர் நகரின்பெரும்பாலான பகுதிகளில் சன் டி.வியை மட்டும் இந்த மாதத் துவக்கத்தில் கேபிள் ஆபரேட்டர்கள்ஒளிபரப்பினார்கள்.
அந்த ஒளிபரப்பும் அவ்வளவு தெளிவாக இல்லை. "கர்"ரென்ற சப்தம் வந்து கொண்டே இருந்தது. இரவுநேரங்களில் மட்டும் சன் டிவியை ஒளிபரப்பிவிட்டு காலையில் கட் செய்து வருகின்றனர் சில கேபிள் டிவிஆபரேட்டர்கள்.
சிறிது நேரம் சன் டிவியைக் காட்டிவிட்டு மாதந்திர கேபிள் டிவி பணம் வசூலிக்க வந்து நிற்கின்றனர். அனைத்துத்தமிழ் சேனல்களையும் ஒளிபரப்பத் தொடங்கிய பின்னர் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லதுகேபிள் இணைப்பைத் துண்டித்து விடுங்கள் என்று ஆபரேட்டர்களிடம் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் கேபிள் ஆபரேட்டர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.பெரும்பாலான தமிழர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் அவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் கூட கர்நாடக அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் உள்ள தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டியும்உணர்ச்சியே இல்லாமல் கர்நாடக அரசு அமைதி காத்து வருகிறது.
ஒரு சில அமைச்சர்கள் இது தொடர்பாகப் பேசினாலும் அவர்களை கன்னட வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்மிரட்டி அடக்கி விடுகின்றனர்.
இருந்தாலும் வரும் 23ம் தேதி கன்னட அமைப்புகளை அழைத்து இது தொடர்பாகப் பேசப் போவதாக அம்மாநிலஉள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி அளித்துள்ளார். மேலும் அதிமுக உள்ளிட்ட கட்சிநிர்வாகிகளுடனும், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
கர்நாடக அதிமுக செயலாளரான புகழேந்தி தலைமையில், பெங்களூரில் பெரும்பாலும் தமிழ் படங்களைஒளிபரப்பும் தியேட்டர்களின் அதிபர்கள் சமீபத்தில் கார்கேயை அவருடைய வீட்டில் சென்று சந்தித்த போது அவர்இவ்வாறு உறுதி அளித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட கன்னட டி.வி. சேனல்களை தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் மீண்டும்ஒளிபரப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு புகழேந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கர்நாடகத்திலும் தமிழ் டி.வி. சேனல்களின் ஒளிபரப்பு விரைவில் தொடங்கி விடும் என்று தமிழர்கள்ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications