நிலப்பட்டா மாற்றுவதற்காக ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
விளாத்திகுளம்:
நிலப்பட்டாவை மாற்றுவதற்காக ரூ.1,000 லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கருத்தையாபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர், தன்பெற்றோர் பெயரில் இருந்த நஞ்சை நிலத்தை தன் அண்ணன் பெயரில் மாற்ற விரும்பினார்.
இதற்காக நிலப்பட்டாவை மாற்றும் பொருட்டு அவர் கடந்த குருவார்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாகப்பணிபுரிந்து வரும் சுந்தரகுமாரைச் சந்தித்தார்.
நிலப்பட்டாவை வேறு பெயரில் மாற்ற வேண்டும் என்றால் அதற்காக தனக்கு ரூ.600 கொடுக்க வேண்டும் என்றுசுந்தரகுமார் கேட்டார். வேணுகோபாலும் அப்பணத்தை உடனடியாகக் கொடுத்து விட்டார்.
ஆனாலும் பட்டாவை பெயர் மாற்றிக் கொடுக்காமல் சுந்தரகுமார் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இது குறித்துஅவரிடம் வேணுகோபால் கேட்ட போது, மேலும் ரூ.400 வேண்டுமென்று அவர் கேட்டார்.
இதனால் கோபமடைந்த வேணுகோபால் நேராக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று சுந்தரகுமார் குறித்துப் புகார்கூறினார்.
இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப் படி சுந்தரகுமாரின் வீட்டுக்குச் சென்ற வேணுகோபால் அவரிடம்ரூ.400 பணத்தைக் கொடுத்தார்.
சுந்தரகுமாரும் சந்தோஷமாக அந்தப் பணத்தை வாங்கிய போது, அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்பாய்ந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் சுந்தரகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
-->
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications