சாய்பாபா கோவிலில் குண்டு வைத்தவன் சுட்டுக் கொலை
ஹைதராபாத்:
ஆந்திராவில் சாய்பாபா கோவிலில் குண்டு வைத்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்சுட்டுக் கொல்லப்பட்டான்.
சாய்பாபாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் ஹைதராபாத்தில்குஷ்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் வெடிகுண்டு வெடித்தது. இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே இந்த குண்டுவைக்கப்பட்டிருந்தது.
இதில் பக்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்துவிசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போது இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. பின்னணி இருப்பதுதெரிந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று ரெங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஆசம் என்பவனை கைதுசெய்தனர். வெடிகுண்டை வைத்தது நான் தான் என அவன் வாக்குமூலமும் அளித்தான்.
மேலும் வெடிகுண்டுகளை பார்வதிபுரம் என்ற இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினான். இதையடுத்து அந்த குண்டுகளைப்பறிமுதல் செய்ய நேற்று நள்ளிரவு இவனை அழைத்துக் கொண்டு போலீசார் சென்றனர்.
அவன் குறிப்பிட்ட இடத்தில் புதர் இருந்தது. அங்கிருந்த குண்டுகளை வெளியே எடுக்கிறேன் என்று புதர் பகுதியில் கையைவிட்டமுகம்மத் ஆசம் அங்கிருந்து ரிவால்வர் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தான்.
உடனே போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இடத்திலேயே அவன் சுருண்டு விழுந்தான். இவன்லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்.
இந் நிலையில் கர்னூலைச் சேர்ந்த ஒரு நபரும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டு வெடித்த உடனே ஹைதராபாத்தின் முக்கிய விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கர்னூலைச் சேர்ந்த நபர்அவசரமாக விடுதியை காலி செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கர்னூல் சென்ற தனிப்படை அவனைக் கைது செய்தது. இவன் துணி வியாபாரி என்ற பெயரில் தீவிரவாதசெயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்றே புட்டபர்த்தி வந்துவிட்டார். இன்றுபிரசாந்தி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாபா ஆசி வழங்கி கெளரவித்தார்.
-->


Click it and Unblock the Notifications
