மறுக்கிறார் கருணாநிதி
சென்னை:
ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு நயா பைசா கூட தரப்படவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் கூறியுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
தினகருக்கும் முதல்வர் கிருஷ்ணாவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதைக் காரணமாக வைத்து இப்படிப்பட்டகுற்றச்சாட்டை தினகர் கூறியிருக்கலாம்.
எனது ஆட்சியில் தமிழகத்தில் இருந்து வீரப்பனுக்கு நயா பைசா கூட தரப்படவிலலை. அதே போலத் தான் கர்நாடகத்திலும்பணம் தந்திருக்க வாய்ப்பே இல்லை.
ராஜ்குமாரை மீட்க தூதர்களையும் அதிரடிப்படையையும் தான் நம்பினோம். பணத்தை நம்பவில்லை. நாகப்பாவின் மனைவிபிரமிளா எப்படி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தாரே அதே போலத் தான் என்னை ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மாவும் சந்தித்தார். அப்போது எல்லா உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பணம் எல்லாம் கை மாறவில்லை.
இப்போது நாங்கள் ஆட்சியில் இல்லை, இதனால் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து திமுகவுக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுகுறித்து கவலைப்பட வேண்டியது கர்நாடக அரசு மட்டும் தான்.
ராஜ்குமாரை மீட்க தமிழகம் கர்நாடகத்துக்கு பிற வழிகளில் தான் உதவியது. அதிரடிப்படையின் வேட்டையை நிறுத்துவது,தூதர்களை காட்டுக்குச் செல்ல அனுமதிப்பது என்பதோடு தமிழகம் நிறுத்திக் கொண்டது. வேறு எந்த வகையான நிதி தொடர்பானஉதவியையும் செய்யவில்லை.
தங்கள் அனுபவங்களை எழுதுவது ஓய்வு பெறும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு இப்போதெல்லாம் வழக்கமாகப்போய்விட்டது. நம் ஊர் முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் கூட இப்படித்தான் புத்தகம் போட்டார். விடுதலைப் புலிகளைஎப்படியெல்லாம் சமாளித்தார் என்று அதில் கூறியிருந்தார் என்றார் கருணாநிதி.
வீரப்பனுக்கு பல வகைகளில் பணம் சென்றதாகவும் அப்போதயை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மாவும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினரும் தலா ரூ. 1 கோடியும், ரூ. 2 கோடியும் தந்ததாகவும் அந்தப் பணமாவீரப்பனுக்கு அனுப்பப்பட்டதாகவும் தினகர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications