ராணுவ பஸ் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது: 9 பேர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவ பஸ்ஸை தீவிரவாதிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்தனர். இதில் 5 ராணுவ வீரர்களும் அவர்களதுகுடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்களும் 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாகவே மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம் காஷ்மீரில் தலைதூக்கியுள்ளது. நேற்று காலை ரிசர்வ்போலீசாரின் முகாமை தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர் தாக்கியதில் 6 போலீசார் உயிரிழந்தனர். மேலும்9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாமின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், இதில் யாரும்உயிரிழக்கவில்லை.
இந் நிலையில் கண்ணி வெடி மூலம் ராணுவத்தின் பேருந்தை தகர்த்து தீவிரவாதிகள் அட்டகாசம் செய்துள்ளனர். ஜம்மூ- ஸ்ரீநகர்நெடுஞ்சாலையில் இன்று காலை 11.15 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. இந்த பஸ் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மூ சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது.
இதில் அந்த பஸ் தூக்கி எறியப்பட்டு தூள் தூளானது. அந்த இடத்திலேயே 5 வீரர்களும் 2 குழந்தைகளும் 2 பெண்களும் உடல்சிதறி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்த காட்சி மனதை உருக்கியது.
அதே போல பஸ்சில் இருந்த மற்ற 23 பேரும் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தனர். இவர்களைராணுவத்தினரும் போலீசாரும் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு ஜமாத்-உல்- முஜாகிதீன் மற்றும் ஹர்தக்-ஏ-ஜிகாத்-ஏ-இஸ்லாம் ஆகிய தீவிரவாத அமைப்புகள்பொறுப்பேற்றுள்ளன. தீவிரவாதம் அதன் கடைசி கட்டத்தில் இருப்பதாக முதல்வர் முப்தி முகம்மத் சயீத் கூறியதற்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த இரு கும்பல்களும் கூறியுள்ளன.
நேற்றைய ரிசர்வ் போலீஸ் முகாம் மீது லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதக் கும்பல் தாக்கியது.
-->
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications