உலகின் பாப்புலரான பாடலாக ராக்கம்மா கைய தட்டு தேர்வு
லண்டன்:
பி.பி.சி. ரேடியோ நடத்திய போட்டியில் உலகின் மிகவும் பாப்புலரான பாடலாக தளபதி படத்தின் ராக்கம்மா கைய தட்டு பாடல்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் 2 பாடல்கள் 5வது, 7வது இடத்தைப் பிடித்துள்ளன. 5வது இடத்தை வந்தே மாதரமும் 7வது இடத்தை சையசைய சைய்யா பாடலும் பிடித்துள்ளன.
மணிரத்னதம் இயக்கிய தளபதி படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல் அது. ரஜினியும் மம்மூட்டியும் இணைந்துநடித்த அந்தப் படம் 1991ம் ஆண்டு வெளிவந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஸ்வர்ணலதாவும் அப் பாடலைப் பாடினர்.
பிபிசி ரேடியோ தனது 70வது ஆண்டு விழாவையொட்டி உலகின் சிறந்த பாடல்களை நேயர்களைக் கொண்டேபட்டியலிட்டுள்ளது. 116 நாடுகளைச் சேர்ந்த ரேடியோ நேயர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் வாக்களித்துபாடல்களை தேர்வு செய்துள்ளனர்.
இதுபோல கிட்டத்தட்ட 1,000 பாடலகளை பிபிசி பட்டியலிட உள்ளது.
1979ம் ஆண்டில் வெளி வந்த கிளிப் ரிச்சர்ட்டின் வி டோன்ட் டாக் எனி என்ற பாடல் இரண்டாவது இடத்தையும் அமெரிக்கப்பாடகி செர் பாடிய பிலிவ் என்ற பாடல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜான் லின்னொன் எழுதிய இமாஜின் என்ற பாடல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
5 வது இடத்தை ரஹ்மானின் இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் பிடித்துள்ளது.
பிபிசி உலக சேவை இந்தப் போட்டியை நடத்தியது. இதில் அதிகபட்சமாக வாக்குகள் இந்தியாவில் இருந்து தான் வந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வாக்களித்தவர்களில் ஜப்பானிய பிரதமர் ஜூனிசிரோ கொசுமி, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்மார்க்கோசின் மனைவி இமெல்டா ஆகியோரும் அடக்கம்.
இந்தப் போட்டியின் இறுதி முடிவுகள் டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
-->
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications