நிற்க வைத்தது ஏன்? நீதிபதியுடன் வைகோ மோதல்
பூந்தமல்லி
பொடா நீதிமன்றத்தில் ஆஜராக வந்த வைகோ நீதிபதியுடன் மிகக் கடுமையாக மோதினார்.
வழக்கமாக விசாரணைக்கு வரும்போதெல்லாம் உட்காரச் சொல்லும் நீதிபதி கடந்த முறையும் இம்முறையும் தன்னையும் பிறமதிமுகவினரையும் உட்காரச் சொல்லவில்லை என்பதால் வைகோ பிரச்சனையைக் கிளப்பினார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் பிற 8 மதிமுகவினருடன் ஆஜராக வைகோ கூறியதாவது:
முன்பெல்லாம் விசாரணைக்கு வந்தபோது என்னையும் என்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற மதிமுகவினரையும்உட்காரச் சொன்னீர்கள். ஆனால், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உட்காரவே சொல்லவில்லை.
ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே விசாரித்தீர்கள். ஏன் இந்த மாற்றம் உங்களிடம்? உங்கள் அணுகுமுறை மாற என்ன காரணம்?
நீதிமன்றத்திடம் நாங்கள் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், 1988ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில்,குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எங்களை ஏன் நிற்க வைத்தீர்கள்என்று கடுமையாகக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ராஜேந்திரன், நான் சொன்னதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். விசாரணையைஆரம்பிக்கும் முன் எழுந்து நிற்கச் சொன்னேன். பின்னர் உட்காரச் சொன்னேன். ஆனால், நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றுநினைக்கிறேன். அதனால் தான் தவறாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் என்று கருதுகிறேன் என்றார்.
இதற்கு பதில் சொன்ன வைகோ, நான் நன்றான நினைவுபடுத்திப் பார்த்துவிட்டுத் தான் இதைச் சொல்கிறேன். உங்கள்அணுகுமுறை மாறியிருக்கிறது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, நான் அனைவரையும் ஒரே நிலையில் நடததவே நான் விரும்புகிறேன். யாரையும்புண்படுத்தவோ, பாகுபடுத்தவோ விரும்பவில்லை. அரசு வழக்கறிஞர் விவாதம் தொடங்குகிறார் என்பதால் நிற்கச் சொன்னேன்.தவறாக நினைக்க வேண்டாம். இப்போது விசாரணையைத் தொடங்கலாமா? என்று கேட்டார்.
பின்னர், நீங்கள் அனைவரும் உட்காரலாம் என்றார்.
ஆனால், வைகோ உட்கார மறுத்துவிட்டார். மற்ற மதிமுகவினரும் உட்காரவில்லை. சுமார் ஒன்றேகால் மணி நேரம் நீதிமன்றத்தில்நின்றவாரே இருந்தனர்.
நீதிமன்றத்தின் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், வைகோ வழக்கில் ஆதாரங்களைத் திரட்ட இன்டர்போன்உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர். விவரம் கிடைத்தவுடன் டிசம்பர் இறுதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல்செய்துவிடுவோம் என்றார்.
அப்போது பேசிய நீதிபதி, வைகோ வழக்கில் எப்போது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு 40நாட்கள் வேண்டும் என அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
பொடா கைதிகளை 180 நாட்கள் தான் விசாரணையின்றி வைத்திருக்கலாம். 180வது நாளை நெருங்க 4 நாட்களே உள்ளநிலையில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப் போகிறீர்களா? என்று நீதிபதி கேட்டபோது, நாங்கள் அந்த கணக்கு எல்லாம்பார்க்கவில்லை என வழக்கறிஞர் பதிலளித்தார்.
மதிமுகவினர் வரவேற்பு:
முன்னதாக நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட வைகோவை மதிமுகவினர் பூந்தமல்லி சாலையின் இருபுறமும் ஏராளமானஅளவில் கூடி நின்று வரவேற்றனர். நடை பயணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த அவர்கள்பூந்தமல்லியிலேயே முதல் நாள் இரவில் தங்கினர்.
காலையில் சாலையில் நின்று வரவேற்பு அளித்தனர். வைகோவின் வேன் கடந்து சென்றபோது அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications