வீரப்பனிடம் கொளத்தூர் மணியை அனுப்ப கர்நாடக அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்தல்
பெங்களூர்:
நாகப்பாவை மீட்க வீரப்பனிடம் கொளத்தூர் மணியையே தூதுவராக அனுப்ப வேண்டும் என்று இன்று நடந்த கர்நாடகஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க் கட்சிகள் அரசை வலியுறுத்தின.
வீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று முதல்வர் கிருஷ்ணா தலைமையில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்நடந்தது. இதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் கொளத்தூர் மணியையே தூதுவராக அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளன.
வேறு யாரையும் தூதுவராக ஏற்க வீரப்பன் தயாராக இல்லை, மேலும் மணியைத் தவிர வேறு யாராலும் வீரப்பனை சமாளிக்கமுடியாது. எனவே, அவரையே அனுப்ப வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களும் கூறினர். மேலும் எக்காரணம்கொண்டும் அதிரடிப்படையை அனுப்பக் கூடாது எனவும் வீரப்பனுடன் பேசித் தான் நாகப்பாவை மீட்க வேண்டும் எனவும்பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறின.
எதிர்க் கட்சிகளின் இந்த முடிவு குறித்து விவாதிக்கவும் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துஆலோசிக்கவும் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் கிருஷ்ணா கூட்டியுள்ளார்.
நாகப்பாவை விடுவிக்க வேண்டுமானால் கொளத்தூர் மணியை 12 நாட்களுக்குள் தூது அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால்நாகப்பாவைக் கொல்வேன் என்று தனது லேட்டஸ்ட் கேசட்டில் வீரப்பன் மிரட்டியுள்ளான்.
கொளத்தூர் மணியை கர்நாடகம் 5 வழக்குகளில் கைது செய்து அவற்றின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால்அவர் தூது செல்வதில் சிக்கல் உள்ளதாக கர்நாடகம் கூறி வந்தது.
ஆனால், வீரப்பன் கெடு விதித்துவிட்டதால் சிக்கல் முளைத்தது. இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பேசினார்கிருஷ்ணா.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, மணியை தூதுவாக அனுப்பவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரின. அரசின் கருத்தும் அது தான். ஆனால், அவர் மீது வழக்குகள் உள்ளதால்அவரை அனுப்பவதில் சட்டரீதியில் பிரச்சனைகள் உள்ளன.
அதையும் மீறி அவரை அனுப்புவது குறித்து யோசித்து வருகிறோம். அவரை காட்டுக்குள் அனுப்ப வேண்டுமானால் அவருக்குஎல்லா வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அனைத்து வழக்குகளையும் கர்நாடகம் வாபஸ்பெற்றாக வேண்டும்.
இதற்கான சாத்துயக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். அதே நேரத்தில் வேறு யாராவது வீரப்பனிடம் தூது செல்ல முன்வந்தாலும் வரவேற்கிறோம் என்றார்.
இப்போது கொளத்தூர் மணி மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நேற்றே உள்துறை, நீதித்துறை, உளவுத்துறை மற்றும் போலீஸ்அதிகாரிகளுடன் கிருஷ்ணா ரகசிய ஆலோசனை நடத்தினார். கர்நாடக மின் கழக தலைமை அலுவலத்தில் இந்த ரகசிய சந்திப்புநடந்தது. மூத்த அமைச்சர்கள் சிலரும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
-->
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications