சென்னையில் வக்கீல் சுட்டுக் கொலை: ம.பியில்முக்கியக் குற்றவாளி கைது
சென்னை:
சென்னை தி. நகர் பகுதியில் வக்கீல் மதனகோபால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக்குற்றவாளி இக்பால் கான் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இக்பால் கான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே ம.பியைச் சேர்ந்த இரண்டுபேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலை நடந்ததன் பின்னணி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹசன்.இவர் ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர்.
சர்வதேச அளவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல், விற்பனைக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும்இவருக்கும், சென்னையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகநட்பு ஏற்பட்டது.
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு வக்கீலாக இருந்து வந்தார் மதனகோபாலுக்கும் பாலகிருஷ்ணனின்சகோதரி விஜயலட்சுமிக்கும் அந்தச் சமயத்தில் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், மதனகோபால் தன்னை ஏமாற்றி விட்டதாக ஹசனிடம் கூறினார்.
இதையடுத்து மதனகோபாலைத் தீர்த்துக் கட்ட ஹசன் முடிவு செய்தார். தனது அடியாளான இக்பால் கானைஅழைத்து ரூ.3 லட்சம் பேசி அவரை சென்னைக்கு அனுப்பினார்.
இக்பால் கான் தன்னுடன் ராஜேந்திர குமார் சர்மா, ஜலீல் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.
புறநகரான போரூரில் தங்கியிருந்து சில நாட்கள் மதன கோபாலை நோட்டம் விட்ட இவர்கள், கடந்த ஜூலைமாதம் 6ம் தேதி இரவு தி. நகர் பாண்டி பஜார் பகுதியில் காரில் வந்து இறங்கிய மதன கோபாலை சுற்றிவளைத்தனர். பின்னர் இக்பால் கான், மதன கோபாலை சுட்டுக் கொன்றான்.
இதையடுத்து போலீஸார் தற்போது முக்கிய குற்றவாளியான இக்பால் கான் உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மத்தியப் பிரதேசத்திலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு விட்டனர்.
-->
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications